நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து செல்லும் அதி நவீன ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது
நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய அதி நவீன ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தையடுத்த வங்காள விரிகுடாவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்த சோதனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றதையடுத்து அதன் வடிவமைப்பிற்கு காரணமாக இருந்த ஏ.கே. சக்ரவர்த்தி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இந்த ஏவுகணை தனது கவிதை என்றும், இந்த கண்ணீர் மட்டற்ற மகிழ்ச்சி மற்றும் பரவசத்தின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார்.
Post a Comment