ஈரானில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு பகரங்க தூக்கு
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கடைத்தெரு ஒன்றில், ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். இதே காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது.
இந்த வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மேலும் இருவருக்கு தலா 74 சவுக்கடியும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களும், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் வானொலி செய்தி வெளியிட்டது. சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.
Nothings to saying but subahanallah!Sharia law killing person must kill but theifer and stoler what kind of punishtments get?
ReplyDelete