வீட்டுக்கும் செல்ல முடியாமல், இடையிலும் இருக்க முடியாமல் ரவூப் ஹக்கீம்..!
கடந்த வாரத்தில் தமது பேராளர் மாநாட்டை நடத்திய, நீதியமைச்சர் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதிகாரத்தை பரவலாக்கும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நீக்கப்படுவதையோ, அதன் அதிகாரங்களை குறைப்பதையோ எதிர்க்க போவதாக ஏகமானதாக முடிவு செய்தது. அத்துடன் அதிகார பரவலாக்கம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த கட்சி கூறியது.
முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு கவனத்தில் கொண்ட மற்றுமொரு விடயம். தற்போது எழுந்து வரும் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் தொடர்பான விடயமாகும். இலங்கையில் இதுவரை இருந்திராத பிரச்சினையை ஏற்படுத்தி, இறைச்சி விற்பனையின் போது, ஹலால் இலச்சினை பயன்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம் அரசியலுக்கு எதிராக இந்த அடிப்படைவாத சக்திகள் சுமத்தும் குற்றச்சாட்டு, பௌத்த புராதன இடங்கள் அழிக்கப்படுகின்றன என்பதாகும். அண்மையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , பௌத்த அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியிருந்தார்.
ராஜபக்ஷ ஆட்சிக்குள், பெருபான்மை இன அடிப்படைவாதம் பலம் பெற்றுள்ள பின்னணியில், 2013 ஆம் ஆண்டு, அந்த அரசாங்கத்தின் பங்காளியான ரவூப் ஹக்கீம், வீட்டுக்கும் செல்ல முடியாமல், இடையிலும் இருக்க முடியாமல், விடுப்படவும் முடியாமல் எதிர்நோக்க போகும் கஷ்டமான வருடமாக மாறும் என்பது தற்போதே தெரிகிறது. டக்ளஸ் தேவானந்தா, தொண்டமான் ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ராஜபக்ஷவினரின் பெரிதான ஆதரவில்லை என்பதை காணக் கூடியதாக உள்ளது.
(மனித உரிமை செயற்பாட்டளரும், சுயாதீன் ஊடவியலாளருமான சுனந்த தேசப்பிரியவே தான் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்)
அடுத்து வரக்கூடிய தேர்தலுக்கு தாராழமாக பிரவேசிக்கக்கூடிய அழவிற்கு இப்படியான பொய் பித்தலாட்ட நடிப்பில் இறங்கியுள்ளார் இந்த ஹகீம். சோ, பதிரிகைகள் வீணாக ஹகீம் பத்திய அலட்டல்கள் வேண்டாம். இன்னமும் மக்களை ஏமாற்ற எத்தனிக்க வேண்டாம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஹகீம் மஹிந்த உறவு ரொம்ப புனிதமானது. ஆக, ஹக்கீமுக்கு அரசால் எந்த அசம்பாவிதமும் நடக்காது. ஆதலால், அடுத்தமுறையும் நமது மக்கள் தாரளமாக ஹக்கீமுக்கு வோட்டு போடுங்க. இந்த வாக்குறுதி மட்டும் போதும், ஹகீம் கலக்கத்திலிருந்து தெழிவு பெற்றுவிடுவார்.
ReplyDeleteVidukum sellawanam & idaiudum iruga wanam SLMC Leader posta Hon Rishad Bathirudeen idam kuduthu parungal.apa tharium SLMC poruthamana Leader Rishad Bathirudeen
ReplyDeleteஅட நாசமா போன நண்பர்களே நாட்டுல இப்போது முஸ்லிம்களின் நிலைமையை யோசிங்ககடா எங்களோட இந்த தற்பெருமைத் தலைவர்கள் எல்லாம் எப்போ ஒன்றாக நின்று இலங்கை முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கப்போரர்கள்,இந்த அரசாங்கம் தற்போது வெளிப்படையாக அதன் இனவாதக் கொள்கையை காட்டி விட்டது ஆனால்இன்னும் எமது தலைவர்கள் பதவிக்குப் போட்டியில்.
ReplyDelete