Header Ads



சட்டத்தை பாதுகாக்கும் நாடே சிறந்த நாடு - கோத்தா பிரகடனம்


சட்டம் மற்றும் சமாதானத்தை உரிய வகையில் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டால் மக்களின் நற்பெயரினை பெற முடியும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டிலும் சட்டம் மற்றும் சமாதானம் ஆகியன பாதுகாக்கும் போதே அது சிறந்த நாடாக கருதப்படும். அதன் பொறுப்பு காவல்துறையினரிடம் காணப்படுகின்றது.

எனவே, சட்டம் மற்றும் சமாதானம் ஆகியன உரியமுறையில் பேணப்படும் பட்சத்தில் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நீண்ட காலமாக அமுல் படுத்தாதிருந்த 93 ஆயிரம் பிடியாணைகளில் 72 ஆயிரம் பிடியாணைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  Sfm

2 comments:

Powered by Blogger.