Header Ads



பெண் வன்முறை, திருட்டுக்களை தடுக்க தனியார் பஸ்களில் கமரா



நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் தானியங்கி கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து தனியார் பஸ்களிலும் தானியங்கி கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரோஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பஸ்களில் பெண் பயணிகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
 அத்துடன் திருட்டுகள் உள்ளிட்ட முறைகேடுகளை இதனூடாக தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய நாளை மறுதினம் தொடக்கம் இந்தற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது பஸ்களில் அதிகரித்துள்ள வன்முறை மற்றும் களவுகளைத் தடுக்கும் நோக்கம் கருதி தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி.ரட்ணாயக்க குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தமக்கு பணிப்புரை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

அதன்படி ஜி.பி.ஆர்.எஸ் ஊடாக கமரா பதிவுகளை கண்காணிப்பதற்கு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.