சவூதி அரேபியாவில் இன்னல்களுக்கு முகம்கொடுத்த இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்
வீட்டுப் பணிப்பெண்களாக சவுதிஅரேபியாவிற்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த இலங்கை பெண்கள் 14 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
நேற்றிரவு 11.55 அளவில் ரியாத்திலிருந்த இலங்கை வந்த யு.எல்.270 என்ற வானூர்தியிலேயே அவர்கள் நாடுதிரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அம்பாறை, குருணாகலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் சவுதி அரேபியாவில் 3 வருடங்களாக தொழி;ல் புரிந்த நிலையில், அங்கு பலவித நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. sfm
Post a Comment