மலாலாவுக்கு மீண்டும் சத்திர சிகிச்சை
பாகிஸ்தானில் பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி வந்த சிறுமி மலாலா யூசப்சய் (15). ஸ்வாட் பகுதியை சேர்ந்தவள். கடந்த அக்டோபரில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவளை தலிபான்கள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவளை இங்கிலாந்தின் பர்மிங்காம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் தேறி சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் அவளது மண்டை ஓட்டில் இன்னொரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். மலாலாவின் மண்டை ஓட்டில் சிதைந்து போன பகுதிகளில் டைட்டானியம் பிளேட் பொருத்தி கிரானியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment