யேமன் நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் ஆக்கிரமிப்பு தாக்குதல்..!
யேமன் நாட்டில் முஸ்லிம் ஆயுததாரிகளை குறிவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் சானாவுக்கு கிழக்கே 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மரிப் நகரத்துக்கு அருகே உள்ள வாடி அபிதா என்ற இடத்தில், ஆயுததாரிள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சென்ற வாகனம் மீது, சனிக்கிழமை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்று பழங்குடியின தலைவர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விமான தாக்குதலில் அந்த கார் தீப்பற்றிக் கொண்டது. இதனால், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் கருகி விட்டன.
எனினும் ஒருவரின் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அல்-காய்தா அமைப்பின் உள்ளூர் தலைவர் இஸ்மாயில் பின் ஜமில் என்று தெரியவந்துள்ளது. இதே பகுதியில் ஆயுததாரிகள் சென்ற மற்றொரு வாகனம் மீது, ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த ஹமாத் ஹசன் கிரெய்ப் உள்ளிட்ட 5 ஆயுததாரிகள் ொல்லப்பட்டனர் என்று பழங்குடியின வட்டாரங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேர், சவூதி அரேபியா ஆயுததாரிகள் ன்று தெரிய வந்துள்ளது.
வேறொரு இடத்தில் நான்கு ஆயுததாரிகள் ென்ற காரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், ராக்கெட் குறிதவறியதால் அந்த வாகனம் தப்பிவிட்டது.
கடந்த 2011-ல் ஆளில்லா விமானம் மூலம் 18 தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா, 2012-ல் 53 முறை தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment