உதவி செய்பவரே மனிதர்களில் சிறந்தவர் - அக்குறணை உலமா சபைத் தலைவர் மௌலவி சியாம்
(ஜே.எம்.ஹபீஸ்)
மனிதனுக்கு ஏதேனும் உதவி செய்பவனே உலகிலுள்ள மனிதர்களுள் சிறந்தவர் என்றும் இஸ்லாமிய கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. எனவே மனிதனுக்கு உதவும் பணிகளில் நாம் முன்னின்று உயர்ச்சியடைய முடியும் என்று அக்குறணை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி சியாம் (யூசுபி) தெரிவித்தார்.
இன்று 27-01-2013 அக்குறணை துனுவில வீதியில் 'மனிதாபிமானத்திற்காக உதவும் கரங்கள்' அமைப்பின் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனில் 'நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இறை தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 'மனிதர்களுள் சிறந்தவர் யாரென்றால் இன்னொறு மனிதனுக்கு உதவி செய்பவன என்று கூறியுள்ளார்கள்.
மேலுள்ள இரு விடயங்கள்கள் மூலமும் மனிதனுக்கு உதவுவது மிகவும் உயர்வான பண்பு என்பதனை நாம் தெளிவாககப் புருpந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் ஒருமனிதனுக்கு இன்னொரு மனிதன் உதவி செய்யும் போது எதிhபாராத விதத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான். அதாவது இறை கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருக்கும் மலக்குகள் (சேவகர்கள்) மூலமாகஅம்மனிதனுக்கு இறைவன் உதவி செய்கின்றார்ன. இங்கே மனிதன் எனக் கூறப்பட்டவைகள் எந்த இனமாகவும் இருக்கலாம். அவை அனைத்தும் இறை படைப்புக்களேயாகும்.
மேலும் இறைவன் கூறுகின்றான் உங்களிடம் செல்வம் உண்டா அதன் மூலம் பிறருக்கு உதவுங்கள். உங்களிடம் வீரம உண்டா அதன் மூலம் பிறருக்கு உதவுங்கள். உங்களிடம் அதிகாரம் உண்டா அதனைக் கொண்டும் பிறருக்கு உதவுங்கள். உங்களிடம் கல்வி அறிவு உண்டா அதைக் கொண்டும் பிறருக்கு உதவுங்கள். உங்களிடம் ஏnதுனும் நற்பண்புகள் உண்டா அதன் மூலம் பிறருக்கு உதவ முடியுமா அதையும் செய்யுங்கள். எனவே பிறருக்கு உதவுதல் என்பது எம்மீது விதியாக்கப்பட்ட ஒரு கருமமாகும்.
எனவே 'உதவும் கரங்கள்' என்ற இப்படியான அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் எந்த வகையில் உதவிகள் தேவைப் படுகின்றனவோ அந்த வகையில் நாம் உதவ முடியும்.
உதிகள் செய்ய முன் வரும் அமைப்புக்களுக்கு தங்களிடமுள்ள வளங்களை மற்றவர்கள் வழங்குவதன் மூலம் உரியவர்களுக்கு உதவிகள் சென்றடைய முடியும் என்றார்.
துனுவில ரஜமகா விகாராதிபதி சமிந்த தேரர் மத்திய மாகாண சபை அங்கத்தவர் ரிஸ்வி பாரூக் அளவத்துகொடை பொலீ}; நிலையப் பொறுப்பதிகாரி நசாந்த ஹெட்டியாரச்சி உற்பட பெருமளவு பொது மக்க்ள் பிரசன்னமாகி இருந்தனர்.
அண்மைகாலமாக அக்குறணைப் பிரதேசத்தில் இனமத குல பேதங்களுக்கு அப்பால் மூலம் அக்குறணைப் பிரதேசத்தில் பிரபலம் அடைந்த ஒரு அமைப்பாக 'எல்பிங் ஹேன்ஸ்' என்ற உதவும் கரங்கள் என்ற அமைப்பு திகழ்கிறது. குறிப்பாக கடந்த காலத்தில் ஏற்பட்ட குடி நீர் பிரச்சினையின் போது இவ் அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் குறிப்பாக பௌத்த மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு அமைப்பாக இத மாறியுள்ளது.
Post a Comment