சட்டக்கல்லூரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவரின் விடைத்தாள் மீளமதிப்பீடு இல்லை..!
(Sfm) 2012 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள ஆராய வேண்டிய அவசியமில்லை என சட்டக்கல்லூரியின் அதிபர், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டகல்லூரி நுழைவு பரீட்சை விடைத்தாள் தொடர்பான மீளாய்வை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை தமக்கு கையளிக்குமாறு இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் டப்ளியு.டி.ருத்ரிகு ஏற்கனவே கோரியிருந்தார்.
எனினும், அந்த அதிபர் இதுகுறித்து சட்ட ஆய்வு சபையின் அனுமதியை பெற்றிருக்கவில்லை. அவ்வாறான அனுமதியை பெறாது பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கைகளை விடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டக்கல்லூரி அதிபர் தமது கோரிக்கையை மீளப்பெற்றுக் கொள்வதாக தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார சேவைக்குத் தெரிவித்தார்.
இதனிடையே, 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment