Header Ads



'பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக் கோருவோம்'


(மூதூர் முறாசில்)

பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற  சமூக சீரழிவுகளை தடுப்பதற்கு       பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்துவதே முதன்மையான வழியெனவும் அவ்வழியில் அனைவரையும்  ஒன்றிணையுமாறும் மூதூர் பீஸ்- ஹோம் நிறுவனம் கோரியுள்ளது.

'பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்தக் கோருவோம்' என்னும் தலைப்பில்   மூதூர் பீஸ்- ஹோம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு   கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெண்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதன் மூலம்   கிடைக்கும் நன்மையை விட தீமையே அதிகரித்துச் செல்கின்றது. சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறை, போதை வஸ்துப் பாவனை, தற்கொலை முதலான தீமைகள் அதிகரித்துச் செல்வதற்கும்   குடுப்பப் பிரச்சினை மற்றும் மாணவர் இடை விலகல் உள்ளிட்ட  பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதானது ஓரு வகையில் காரணமாக அமைந்து விடுகின்றது.

அதேபோல் பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்களில் சிலர் எஜமானர்களால் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உடல் மற்றும் உளப்பாதிப்புக்களுடன் நாடு திரும்புவதையும்  வேறு சிலர் சிறைகளில் சிக்கிக் கிடப்பதையும் இன்னும் சிலர் தூதரகங்களில் தஞ்சம் புகுந்து வருவதையும் தொடர்ந்து அவதாகிக்க முடிகிறது.

அத்தோடு, பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்களின் குடும்பத்திலுள்ள ஆண் வர்க்கத்தினர் பெரும்பாலும் எவ்வித தொழில் முயற்சியிலும் ஈடுபடாது சோம்பேறிகளாக முடங்கிக் கிடப்பதையும்  அவர்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதையும்  காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய மோசமான நிலைமைகளை கவனத்திற் கொண்டே எமது நாட்டைவிட   வறுமையான  நாடுகள் கூட பெண்களைப் பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை ஏலவே நிறுத்திவிட்டன.

எனவே, இத்தகைய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் பெண்களை பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அனைவரும் ஒன்றிணைந்து       கோருவோம்  என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



2 comments:

  1. Hi Friends,

    நமது சமூகத்திலுள்ள பெண்கள் யாரும் உல்லாச வாழ்வுக்கு ஆசைப்பட்டு கடல்கடப்பதில்லை. ஒரு தாய் அல்லது இளம்பெண் எப்போதுமே தனது கணவன் குழந்தைகள் என்றும் தாய் தகப்பன் உற்றார் உறவினர் என்றும் பாசப்பிணைப்புக்குள்தான் வாழ நினைப்பாள். அதுதான் அவளுக்குரிய உயரிய பாதுகாப்பையும் வழங்கமுடியும். அத்தகைய மனோபாவம் கொண்டவள் மொழிபுரியாத கலாசாரம் புரியாத அந்நிய நாடொன்றுக்குப் போக நினைக்கின்றாள் என்றாள் அங்கனம் அவளை நிர்ப்பந்தம் புரியும் காரணிகள் யாவை?

    வேலையில்லா திண்டாட்டம், சீதனம் சேர்க்கும் தேவை, கணவரின் பொறுப்பின்மை, நோய் முதலிய இயலாமை, சோம்பேறித்தனம் பிள்ளைகளின் பசி, வறுமை அயலவரின் ஏளனம், அலட்சியம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இவற்றைவிட காசு பணத்துக்கு சமூகம் தரும் அபரிமித மதிப்பு,செல்வாக்கு.. 'பணத்தால் எதையும் வாங்கலாம் மறைக்கலாம்' என்று காட்டித்தருகின்ற சமூகப் பெரிய மனிதர்களின் அற்ப நடவடிக்கைகள்....

    Say now, சுற்றியுள்ள சூழல் இத்தனை 'ஆரோக்கியமாக' இருக்கும்போது ஒரு பெண் என்ன முடிவுக்கு வர முடியும்?

    நீங்கள் வெறும் ஹதீதுகள் மட்டும் கூறிக்கொண்டிருந்தால் இந்த சமூக அவலங்களை ஒழித்துவிட முடியுமா?

    இந்த நிலைமைகளை ஒழிக்க -குறைந்தபட்சம் கட்டுப்படுததுவதற்காகவாவது- எதுவித சமூகநலத் திட்டமும் இல்லாது என்ன மாற்றம்தான் வந்துவிடும்?

    ReplyDelete
  2. dhatha niga kuwait vanthu paarunga . apparom solluvinga inga nadapathu vibacharam .

    ReplyDelete

Powered by Blogger.