கிண்ணியா நிஸா பாலர் பாடசாலை வருடாந்த நிகழ்வும் பரிசளிப்பும்
(மொஹமட் ராசி வாஜுத்தீன்)
சிறார்களுக்கு பொறுமை கொண்ட உள்ளத்தோடு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்குதான் அளப்பரியதாக அமைகின்றது. நிஸா முன்பள்ளி பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த நிகழ்வும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கிண்ணியா தேசிய பாடசாலை அப்துல் மஜீது மண்டபத்தில் முன்பள்ளி பொறுப்பாசிரியை நிஸா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கிண்ணியா நகர சபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி வருகை தந்ததோடு எம்.என்.எம். சமீம், கே.ஏ.அகது, மற்றும் டபில்யு.கே.எம்.பெனான்டோ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்வுக்கிடையில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. நிகழ்வின் இறுதியில் வருகை தந்திருந்த அதிதிகளால் முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டதோடு நிஸா முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த நிகழ்வும் பரிசளிப்பும் இனிதே சலவாத்துடன் நிறைவு பெற்றன.
Post a Comment