துவிச்சக்கர வண்டி ஓடுபவர்களின் கவனத்திற்கு..!
துவிச்சக்கர வண்டிகளின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் பொருத்தப்படும் ஔி தெறிப்பாக்கி இன்றி பயணிக்கும் துவிச்சக்கர வண்டி செலுத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரமும் 1951ஆம் ஆண்டு 37ஆவது மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரமும் இது தொடர்பிலான நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினார்.
இதன்படி எதிர்வரும் காலங்களில் துவிச்சக்கர வண்டிகளில் சிவப்பு நிற தெறிப்பாக்கி இன்றி பயணிக்கும் துவிச்சக்கர வண்டி செலுத்துநர்களை கைது செய்ய நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment