Header Ads



சொகுசு வாகனங்களை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் பிடிபட்டது


(ஜே.எம்.ஹபீஸ்)

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சொகுசு வாகனங்களை கடத்தி அதற்கான போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்றை  அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வேன் ஒன்றை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்த பின்  அவருயை 30 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள வேன் ஒன்றை அவரிடமிருந்து தந்திரமாகப் பெற்று அக்குறணை பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவருக்கு 21 இலட்சம் ரூபாவுக்கு அதனை விற்பனை செய்ய முயற்சித்த போது இச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல வருடங்கலாக இவ் வாகன கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
சுந்தேக நபர்களை கண்டி  பிரதான நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  என்.பீ. அம்பன்வலவின் ஆலோசனையின் பிரகாரம் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.


No comments

Powered by Blogger.