தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
(சௌஜீர் ஏ. முகைடீன்)
தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் தொடர்பான விழிப்புனர்வுக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் முதல்வர் செயலகத்தில் ஹச் கையடக்க தொலைபேசி நிறுவனத்தினால் நேற்று (08.01.2013) நடாத்தப்பட்டது.
பெரியநீலாவணை பிரதேசத்தில் ஹச் கையடக்க தொலைபேசி நிறுவனத்தினால் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் நிர்மாணிக்கப்படு வருகின்றது. குறித்த கோபுரத்தை அண்மித்து காணப்படுகின்ற குடியிருப்பாளர்களுக்கு அக்கோபுரத்தினால் மின்னல், இடி தாக்கும் அபாயம் காணப்படுவதால் அதற்கான அனுமதியினை இரத்துச் செய்து நிர்மாணப் பணியினை நிறுத்துமாறு பிரதேச வாசிகள் கல்முனை முதல்வரிடம் முறையிட்டனர்.
மக்கள் நலனில் என்றும் அக்கரையுடன் செயற்படும் முதல்வர் இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி வினவியபோது “அவ்வாறான தாக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை” எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதேச வாசிகளிற்கு மேற்படி விடயம் தொடர்பான விழிப்பணர்வு கூட்டத்தை நடாத்துமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள இடி தாங்கி கருவி மூலம் அப்பிரதேசத்தில் ஏற்படுகின்ற மின்னல், இடி நிலத்துக்கு கடத்தப்படுவதால் அயலவர்களுக்கு மின்னல், இடி என்பவற்றில் இருந்து இலவசமாக பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து ஏற்படும் மின் காந்த அலைகளினால் மனிதர்களிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அதனாலேயே கட்டடங்களின் மேல்பகுதியில் கூட மேற்படி கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
இலங்கை தொலைத்தொடர்பு ஓழுங்கு படுத்தும் ஆணைக்கழுவின் அனுமதியினைப் பெற்றே நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட சாத்தியம் இருக்குமேயானால் குறித்த ஆணைக்குழு அனுமதியினை வழங்கி இருக்காது என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பிரதேச வாசிகள், முறைப்பாட்டாளர்கள் மேற்படி கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தபோதிலும் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிகழ்வில் மின்னல் பாதுகாப்பிற்கான தீர்வினை வழங்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.ஆர்.அபேசிங்க, தொலைத்தொடர்பு ஓழுங்கு படுத்தும் ஆணைக்கழுவின் அதிகாரிகளான ஏ.என்.ஜயசிங்க, கே.வி.பெர்னான்டோ, ஹச் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர் கமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment