Header Ads



எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு


பாகிஸ்தான் - இந்தியா  எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதன் எதிரொலியாக, பாகிஸ்தான் விமானப்படை திடீர் போர் ஒத்திகை நடத்தி உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை சப்ரோன் பண்டிட் என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போர் ஒத்திகை நடத்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. 

இதன் பின்னணியில் பாகிஸ்தான் விமானப்படை தரைப்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த போர் ஒத்திகையை திடீரென்று நடத்தியது. ஜெட் ரக போர் விமானங்கள் இந்த ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டன. பாகிஸ்தான் விமானப்படை தளபதி தலைமை மார்ஷல் தார் பட், இந்த போர் ஒத்திகையில் பங்கேற்று பல்வேறு படைப்பிரிவுகளின் தயார் நிலையை மதிப்பீடு செய்தார். 

மேலும் அவர், 'எப்-16' ரக ஜெட் போர் விமானத்தில் பறந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டார். பாகிஸ்தான் ராணுவத்தின் 2-வது இடத்தில் இருக்கும் உயர் அதிகாரியான இணை தளபதிகள் கமிட்டி தலைவரான ஜெனரல் காலித் ஷமீம் வினி, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கியானி ஆகியோரும் போர் ஒத்திகை நிகழ்ச்சியை ஆய்வு செய்தனர். 

பின்னர் ஜெனரல் காலித் ஷமீம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். 

உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை நாம் சந்தித்து வருவதால், உலகளாவிய புவி-அரசியல் சூழல் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் நிலைமை சாதாரணமானவை மட்டுமின்றி, அதிக சவால்கள் நிறைந்ததாவும் உள்ளன. எனவே போருக்கு தயார் நிலையில் இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாகவும் அந்த அறிக்கையில் அவர் கூறி இருக்கிறார்.  

1 comment:

  1. you indian are well educated ? you indians are still worshping animal because you are animal ......ha ha ha

    ReplyDelete

Powered by Blogger.