பொத்துவில் பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா..?
(இர்ஷாத் ஷர்கீ)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க,மாகண கல்விச்செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார,மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம்,அக்கறைப்பற்று வலயக்கலவிப்பணிப்பாளர் ஹாஷீம் போன்ற அதிகாரிகள் பொத்துவில் பாடசாலைகளில் அதிபருக்கான கல்வித்தகமை இல்லாமல் அதிபர்களாக கடமை புரியும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு அதிபருக்கான கல்வித்தகமை உடைய ஆசிரியர்களை அதிபர்களாகவும்,பாடசாலைகளை கருத்தில் கொண்டு உரிய பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களை நியமனம் செய்து பொத்துவில் மாணவர்களினது கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்வார்களா???????.
அம்பாறை மாவட்டத்தில்,கிழக்கு மாகாணத்தில் முதல் முதலில் துறைசார் கல்விமான்களை உருவாக்கிய பொத்துவில் மண் இன்று கல்வியில் பின்தங்கி காணப்படுவதற்கான காரணம் என்ன??
பொத்துவில் பிரதேசம் அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டமட்ட கல்வி வலயமாகும். இப்பொத்துவில் பிரதேசத்தில் 18 முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றதோடு, மூன்று பாடசாலைகளிள் சாதாரன, உயர்தரம் கற்பிக்கப்படுகின்றது. இப்பாடசாலைகளின் ஐந்தாம் தர,சாதாரன தர,உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகள் குறிப்பிட்ட ஒரு மட்டத்தை விட்டு வெளியில் வராமல் இருப்பதும் கல்வியில் மாணவர்களின் தொடர்ச்சியான பின்னடைவும் என்னை அதற்கான காரணங்களை ஆராய்ந்து இக்கட்டுரையை எழுத வைத்தன. இப்பின்னடைவுக்கு பின்னால் பல காரணங்கள் காணப்பட்ட போதும் அதிபர் நியமனம் பிரதான காரணமாக இருப்பதால் இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது.
பொத்துவில் பாடசாலைகளின் பின்தங்கிய பரீட்சை பெறுபேறுகளுக்கான பிரதான காரணமாக கல்வித்தகமைகளையும்,இலங்கை அதிபர் சேவை பரீட்சையில் சித்தி பெற்ற, கல்வி வளர்சியில் தூரநோக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிபர்களாக நியமிக்கப்படாமல் நீண்ட வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு வருவதோடு அதிபருக்கான அடிப்படை கல்வித்தகமை,தூரநோக்கு சிந்தனை இல்லாத ஆசிரியர்கள் அதிபர்களாகவும்,பிரதான பாடசாலைகளில் அதிபராக கடமாயாற்றுபவர்களை விட அதிபருக்கான அதிக கல்வித்தகமைகளையும்,பிற பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலையில் பல வருடங்கள் ஆசிரியராக சேவையாற்றியவர்கள் பல வருடங்களாக பிரதி அதிபராக கடமை புரிவதையும் பொத்துவில் பாடசாலைகளில் அதிகமான காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் அதிபர் நியமனத்துக்கு பின்னால் அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கேள்வி என் மனதில் எழுகின்றது,ஏனெனில் பொத்துவில் பிரதேசத்தில் இலங்கை அதிபர் சேவைக்கான பரீட்சையில் சித்தி பெற்றுள்ள 12 ஆசிரியர்கள் இருக்க 6 பாடசாலைகளில் அதிபருக்கான எந்த தகமையும் இல்லாதவர்கள் பல வருடங்களாக அதிபர்களாக கடமை புரிகின்றனர்.
பின்வரும் பட்டியல் மேற்குறிப்பிட்ட விடயங்களை தெளிவு படுத்துகின்றன.
அதிபருக்கான தகமைகளை கொண்டுள்ள ஆசிரியர்கள்.
01.K. Hamsa (SLPS-2-¡¡-,MA).(SLPS: Sri Lanka Principal Service)
02.M.L Firthous (SLPS-2-¡¡-,MA).
03.M.L.M.Maqbool (SLPS-2,BA).
04.A.L.Rizwan(SLPS-3-BED). (BED: Bachelor of Education)
05.M.B.Abdul Raheem(SLPS-3,MA).
06.M.L.M.Haneefa (SLPS-3,TT in Art).(TT: Trained Teacher).
07.N.P.Jawfer Sadeeque(SLPS-2,TT in Science).
08.M.L.A.M.Ashraff (SLPS-3,TT in English ,BA).
09.N.K.A.Azeez(SLPS-2,TT in Science).
10.A.L.M.Ibraheem (SLPS-3,TT in Primary).
11.K.R.Narulla (SLPS-2,TT in Science).
12.A.L.M.A.Abool Hassan (SLPS-3,TT in Sscience).
அதிபருக்கான தகமைகள் இல்லாமல் அதிபர்களாக கடமை புரியும் ஆசிரியர்களின் கல்வித்தகமையும்,கடமை புரியும் பாடசாலையும்.
01.A.M.A.Hakeem(TT in Primary ).AK/Ashraff School.
02.A.C.Abdul Latheff(TT in Primary ).AK/Minarul Uloom Vitiyalayem.
03.A.L.Samsul Aarifin (TT in Primary ).AK/Hjra Nahar Vitiyalayem.
04.A.L.M.Nizar(TT in Islam).AK/Mina Vitiyalayem.
05.M.L.M.Kalanthar Labbay (TT in Primary ).AK/Darul Falah Vitiyalayem.
06.M.H.Basheer Mohammed (TT in Primary ).AK/Al-Munawara Vitiyalayem.
அதிபருக்கான தகமையுடன் அதிபர்களாக இருக்கும் ஆசிரியர்களும் அவர்களின் தகமைகளும்.
01.M.A.M.Buhary (Bcom,SLPS-2-¡¡).AK/Pottuvil Center College.
02A.L.Kamarudeen(TT,SLPS-3).AK/Al-Irfan Ladies College.
03.Sir.Kareem (TT,SLPS-3).AK/Al-Kalam Muslim (TT,SLPS-3).itiyalayem.
04.A.L.Junaideen(Bsc,SLPS-2-¡¡).Ak/Hidaya Vitiyalayem.
05.M.H.M.Nawas (TT, SLPS-3).AK/ Nooraniya Vitiyalayem.
06.M.H.M.sahabdeen(TT, SLPS-3).AK/AL-Hijra Vitiyalayem.
07.M.L.M.Rafeeque(TT,SLPS-2-¡¡).AK/AL-Ishraq Vitiyalayem.
08.M.L.M.Rahmadulla(TT,SLPS-2-¡).AK/AL-Aqsa Vitiyalayem.
09.M.B.M.A.Majeed(TT,SLPS-1)AK/AL-Asban Vitiyalayem.
10.M.S.M.Hakeem(TT, SLPS-2-¡¡).AK/Kavivanar Azeez Vitiyalayem.
11.M.I.M.Sameem(TT, SLPS-2-¡¡).AK/Bahriya Vitiyalayem.
12.M.A.C.Shihabdeen(TT, SLPS-2-¡¡).AK/Hidaya Vitiyalayem.
சா.உ.தரம் கற்பிக்கப்படக்கூடிய பொத்துவில் மத்திய கல்லூரி,அல்-இர்பான் பெண்கள் பாடசாலை,அல் கலாம்,ஐந்தாம் தர பரீட்சைக்கு பிரபல்யமான பாடசாலைகளான தாருல் பலாஹ்,அஷ்ரப்ஃ ,அல் அஷ்ரக் வித்தியாலயங்களுக்கு,முதுமானி பட்டம்(MA),அதிபர் சேவை பரீட்சை 2-¡¡ல் தேர்ச்சி பெற்ற,அதிக அனுபவமும் மண்னின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தக்கூடிய ஆசிரியர்கள் அதிபர்களாகவும்,தகமை இல்லாமல் அதிபர்களாக இருப்பவர்களின் இடங்களுக்கு கல்வித்தகமையுள்ளவர்கள் உடனடியாக அதிபர்களாகவும்,வெற்றிடம் இல்லாத தகமை உள்ள ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளில் கல்வி வளர்சியில் முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவதன் ஊடாக பொத்துவில் மண் பல வருடங்கள் இழந்த கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதனூடாக சிறந்த கல்வியாளர்களை பொத்துவில் மண்னில் உருவாக்க முடியும்.
அதிபரின் வழிகாட்டலில் மாணவர்களினதும்,பாடசாலையினதும் முன்னேற்றம் தங்கி இருப்பதனால் அதிபர் நியமனம் என்பது தகுதியான,கல்வித்தமைகளை கொண்டுள்ளவர்கள் அவர்களின் தரத்திற்கு ஏற்ப பாடசாலைகளை கவனத்தில் கொண்டு நியமிக்கப்படுவதன் மூலமாகவே சிறந்ததோர் கல்விச்சமூகத்தை உருவாக்குவதற்கான வழியுமாகும்.
இவ் அதிபர் நியமன விடயத்தில் கிழக்கு மாகாண கெளரவ கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க,மாகண கல்விச்செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார,மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம்,அக்கறைப்பற்று வலயக்கலவிப்பணிப்பாளர் ஹாஷீம் போன்ற அதிகாரிகள் பொத்துவில் பாடசாலைகளில் அதிபருக்கான கல்வித்தகமை இல்லாமல் அதிபர்களாக கடமை புரியும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு அதிபருக்கான கல்வித்தகமை உடைய ஆசிரியர்களை அதிபர்களாகவும்,பாடசாலைகளை கருத்தில் கொண்டு உரிய பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களை நியமனம் செய்து பொத்துவில் மாணவர்களினது கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்வார்களா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஇக்கட்டுரையானது மிகவும் நல்ல விடயங்களையும் கருத்துக்களையும் கோடிட்டு காட்டும் ஒன்றாகும். அதனை விடவும் இது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.கட்டுரையாளருக்கு எனது நன்றிகள்.என்னை பொறுத்த வரை பொத்துவில் பிரதேசதிட்கேன்று ஒரு தனியான வலயம் ஒன்றினை பெட்ட்ருக்கொல்வதே நிரந்தரமான தீர்வாக அமையும.ஏன் எனில் இப்பொழுது இருக்கும் வலயமானது பொத்துவில் பிரதேசத்தினை வைத்து விளயாடிக்கொண்டிருக்கின்ற்றது.ஆசிர்யர்களை நியமிப்பது முதல் அவர்களை முன்னரிவிப்பின்றியும் உரிய முறையிலான பதில் ஆசிரியர்களின் நியமனம் இன்றியும் மாற்றம் செய்வதால் கல்வி மிகவும் பாதிப்படைகின்றது.அது போன்று பௌதீக வளங்களின் ஒதுக்கீடும் வலயத்தினால் பாரபட்சமான முறையில் செய்யப்படுகின்றது.இது மிகப்பெரும் அரசியல் பின்னணியுடன்தான் இயக்கப்படுகிறது என்பது மிகவும் கேவலாமானது.
இது தொடர்பில் நாம் MINISTER HISBULLA ,FERIYAL ASHROFF,UTHUMAALEBBAI போன்றோருடன் பேசினோம்.அவர்களோ பொத்துவில் கல்வி ரீதியாக வளம் பெறுவதனை உள்ளார்ந்த ரீதியாக ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.மாகான அமைசர் உதுமாலேப் பெய் ஒரு படி மேலே சென்று சத்தமில்லாமல் தன வாகனத்தில் ஏறி பறந்தே போய்விட்டார்.மற்றவர்களும் கைய விரித்துவிட்டனர்.
இணயும் இருப்பது ஒரேயொரு வழியாகவே எனக்கு தோன்றுகின்றது சிவில் சமூகங்களை ஒன்றிணைத்து இது தொடர்பில் ஆக்க பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதே எதிர்கால கல்விச் சமூகத்திற்கு நாம் செய்யும் நட்பணியாகும். அதன் பின்னர் இக்கடுரையிலுள்ள குறைகள் தானாகவே களையப்படும் என்பது வெள்ளிடை மலை.
ஜஸாக்கல்லாஹ்!
SLPS1 தரத்தில் உள்ள அதிபர் ஆரம்ப பாடசாலைக்கும் SLPS 2, SLPS3 தரத்தில் உள்ள அதிபர் கல்லூரிகலுகும் கடமையாற்றும் போது விளங்கவிலையா? நீங்கலே பாருங்க.
ReplyDeleteபொத்துவில்லில் உள்ள ஒரே ஒரு SLPS1 அதிபர்
NO9-M.P.M . ABDUL MAJEED (TT SLPS1)
ஆனால் NO1,NO2,NO3 மூன்றையும் பாருங்க..................
நன்றி
ALM Irsath(Sharqui)
ReplyDeleteManaging Director of As safa English College Pottuvil
Above contain the message about the pottuvil school principals im not the person who written please who is the one written this one know it your well know adresses to public