Header Ads



காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சமகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இஸ்லாமிய கல்வியையும் உலகக் கல்வியையும் வழங்கி வரும்  -காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் தலைவரும் சவூதி அரேபிய நஜ்ரான் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான கலாநிதி யூ.எல்.அஹ்மத் அஷ்ரப் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சவூதி ஆரேபிய அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைப்பின் ஆலோசகர் ஸாலிஹ் இப்னு அஸ்ஸைஹான்,மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , சவூதி ஆரேபிய அரசின் கல்வி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளான அப்துல்லாஹ் அஸ்ஸூஹ்ரி,ஸஃத் இப்னு ஹம்த் அல் அல்அகீமி,மற்றும் கௌரவ சிறப்பு அதிதிகளினால் 2011,2012,ஆண்டுகளில் வெளியான17 மாணவர்களுக்கு அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் மனாரி மௌலவி பட்டமும் ,சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு 2011 அல்மனார் மாணவர்களின் பிரசவம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதோடு இம் மலரின் நயவுரையை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) வழங்கினார் அத்தோடு இங்கு கல்லூரியின் நூருல் மனார் 3வது சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி அதிபர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ்(ரஹ்மானி),காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி),காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்.ஸ்ரீ.ல.மு.கா. தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான  யு.எல்.எம்.என்.மூபீன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூப்,ஸரீப்தீன் பவுண்டேஸன் ஸ்தாபகர் செய்யித் அலவி சரீப்தீன் (நளீமி),கிழக்கிலங்கை பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி ஐ.எல்.எம்.ஹாஸிம் சூரி,அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரியின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி),மட்டக்களப்பு-காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவர் மௌலவி அலியார் (பலாஹி),அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத்தலைவரும்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவருமான எஸ்.எச்.ஆதம்பாவா,அல் ஹிக்மா அமைப்பின் தலைவர் ஸைஹூத்தீன் (மதனி), அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி , அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி உயர் மட்டக்குழு உறுப்பினர்களான எம்.சி.எம்.ஏ.ஜவாத்,ஏ.ஜே.எம்.மாஹிர்,அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அதிபர் எஸ்.எல்.எம்.நஸ்மல் (பலாஹி) மற்றும் அரபுக் கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் உலமாக்கள் புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.












No comments

Powered by Blogger.