Header Ads



றிசானா மரண தண்டனை குறித்து சவூதி அரேபியாவின் விளக்கம்..!

(Vi) சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக் தொடர்பில் உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தம்மை சாடுவதை சவூதி அரேபியா கண்டித்துள்ளதுடன் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளது.

அத்துடன் இலங்கையானது குறித்த தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து தனது தூதுவரை திருப்பி அழைத்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள சவூதி அரேபியா அதனை கண்டித்துள்ளதுடன்  அந் நடவடிக்கையானது குறித்த சம்பவம் தொடர்பில்  தவறான தகவலினையே உலகுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

சவூதி அரசின் சார்பில் அதன்  பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

குறித்த பணிப்பெண் 21 வயதானவர்.அவ்வாறே அவரது கடவுச்சீட்டில் உள்ளது. குற்றச்செயலுடன் அவர் சம்பந்தப்பட்டுள்ளார். இந் நிலையில் சவூதி அதன் சட்டத்தையே அமுல் செய்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு ஒரு போதும் சவூதி மரண தண்டனையை அமுல்செய்வதில்லை. கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரை மன்னிப்பளிக்கச்செய்ய கடுமையாக முயற்சிக்கப்பட்டது.அதற்கான இரத்தப்பணமும் வழங்க சவூதி தயாராகவே இருந்தது. எனினும் குறித்த பெற்றோர் மன்னிப்பளிக்கவில்லை.

சவூதி அரேபிய அனைத்து  சட்ட திட்டங்களையும் மதிக்கிறது. தனது நட்டு மக்களின் உரிமைகளுக்கும் உடமைகளுக்கும் கெளரவமளிக்கிறது. இந் நிலையில் சவூதியின் நீதித் துறையிலும் அதன் தீர்புகளிலும் எந்தவிதமான தலையீடுகளையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சவூதியின் குறித்த மரண தண்டனை நிறைவேற்றத் தீர்ப்பை ஐ.நா.வும் மனித உரிமைகள் அமைப்புக்களும் கண்டித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையிலேயே இது குறித்து சவூதி பதிலளித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. 2005 மேமதம் 04ம் திகதி தாவத்மி மாகாணத்தின் அந்த வீடுக்கு பணிபெண்ணாக சென்று 2005 மேமாதம் 21ம் திகதி தன் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டால் என்ற குற்ற சாட்டுடன் அந்த பெண் தான் பணி புறிந்த வீட்டின் எஜமானர்களால் போலிஸ்லில் ஒப்படைக்கபட்டிருக்கிறார்ல் அந்த பெண்மேல் உள்ள அந்த வீட்டினரின் குற்றசாட்டு அந்த பெண் சண்டைபிடித்து கோபித்துகொண்டிருந்தால் குழந்தையை கொள்வேன் என மிரட்டி இருந்தால் என்பதே இப்படிதான் அவர்கள் வாக்குமூலம் கொடுதிருக்கின்றனர் 15 நாட்களுக்குள் அந்த பெண்ணால் எப்படி சண்டைபிடிக்கும் அளவுக்கு அறபை தாராளமாக பேச முடிந்தது ச்ண்டைபிடித்து கோபித்து கொண்டு குழந்தையை கொள்ளுவேன் என்று மிரட்டிய பெண்ணிடம் எப்படி குழந்தைக்கு பால் ஊட்டும் பொறுப்பை அந்த நேரத்தில் நம்பி வழங்கி இருந்தனர்???

    வழக்கில் இவ்வளவு பெரிய சந்தேகமும் ஓட்டையும் இருக்கையில் எப்படி அது சட்டபடி சர்வதேச நியமனங்களுக்கு அமைந்த தீர்பாக இருக்க முடியும்?

    ReplyDelete
  2. There no any doubt about late rizana nafeek situation,this animal family gave her wrong information and justice did big mistake.So my opinion saudi arabian this family invold to murder late Rizana nafeek.

    ReplyDelete

Powered by Blogger.