அமெரிக்காவுக்கு கோட்டாவின் பதிலடி..!
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் பிரேரணை செயற்பாடுகள் காரணமாக, இலங்கைக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு முதலீடுகள் குறைவடையலாம் என்று அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த கருத்துக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பதில் வழங்கினார்.
அமெரிக்காவினால் மாத்திரம் இன்றி, எந்த ஒரு வெளிநாட்டு தரப்பும், ஏன் இராணுவத்தினரை தண்டனைக்கு உட்படுத்துவதில்லை என்ற கேள்வியை தம்மிடம் எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால், இலங்கைக்கான பயிற்சிகளை இடைநிறுத்தும். இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை.
அமெரிக்கா தமது பயிற்சிகளை இடைநிறுத்துமாக இருந்தால், சீனாவிடம் அவ்வாறான பயிற்சிகளை பெற்று கொள்ள முடியும்.இதனைதவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment