சகோதரி றிசானாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சொக்கலேட்டும், புதிய ஆடைகளும்..!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சகோதரி றிசானா நபீக்கை பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ள டாக்டர் கிபாயா இப்திகார், றிசானாவுக்கு வழங்குவதற்காக சொக்கலேட்டும், புதிய அடைகளும் கொண்டுசென்றுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் கிபாயா இப்திக்கார் எமது இணையத்திற்கு கையடக்க தொலைபேசி மூலமாக வழங்கிய பிரத்தியேக தகவல்கள் கீழ்வருமாறு..!
சவூதி அரேபியாவிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டே நான் தொழில் புரிகிறேன். எனவே எல்லாவற்றையும் பகிரங்கமாக என்னால் கூறிவிடவும்முடியாது. (அவரின் நலன்கருதி சில விடயங்களை இங்கு பிரசுரிப்பதை எமது இணையம் தவிர்த்து கொள்கிறது)
றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள் என்றும் மறக்கப்பட முடியாது. நான் மிகவும் வலியை உணருகிறேன். சவூதி அரேபியாவிலுள்ள எனது வீட்டிற்கும் பலர் வந்துசென்றார்கள். எல்லாம் தற்போது நடந்துமுடிந்து விட்டது. பிரார்த்தனை மாத்திரம்தான் எங்களிடம் தற்போது மிஞ்சியுள்ளது.
நான் (புதன்கிழமை 09-01-2013) றிசானாவை சந்திக்கச் செல்வதற்கு முன்னதாக அவரை இறுதியாக சந்தித்தது கடந்தவருடம் அதாவது டிசம்பர் மாதம் 12 ஆம் திகதியாகும். அப்போது றிசானா மிகவும் அழகாக காணப்பட்டார். என்னை எப்போது நோனா என்று செல்லமாக அழைக்கும் றிசானா அச்சமயமும் எனது தோள்களை பிடித்தவராக ''நோனா நான் எப்போ வீட்டிற்கு போவேன்..? நான் எப்போ உம்மாவை பார்ப்பேன்..?? என்று வினவினார்.
நான் அதற்கு 'அடுத்தமுறை நான் இங்கு வருவதற்கு முன்னர் நீ சிறிலங்காவுக்கு போய்டுவா என்று சொன்னேன்...!
அதற்கு றிசானா.. நோனா.. ''நீங்க எப்பவும் இப்படித்தான் சொல்றிங்க...'' என்றாள்..!
மேலும் அவள் சிறையிலிருந்த காலப்பகுதியில் அவளுக்கு நுஜற் பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நூற் பந்துகள் மூலம் தான் செய்த சிறு கைவினைப் பொருட்களை எனக்கு காட்டி மகிழ்வடைந்தாள்.
(புதன்கிழமை 09-01-2013) சகோதரி றிசானாவை பார்வையிடுவதற்காக அதிகாலை 4 மணியளவில் புறப்பட்டேன். அப்போதுதான் காலை 8 மணியளவில் சிறைச்சாலை வாயிற்கருகில் என்னால் நிற்கமுடியும்.
றிசானாவுக்கு எல்லாப்பொருட்களையும் எடுத்துச்செல்ல முடியாது. அனுமதிக்கப்பட்ட பொருட்களில் றிசானாவுக்கு பிடித்தது சொக்கலேட் ஆகும். எனவே றிசானாவுக்கு வழங்குவதற்காக நான் சொக்கலேட்டும், புதிய உடுப்புகளும் கொண்டுசென்றேன்.
றிசானா அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு நான் சென்றவுடன் நிலைமையை ஓரளவு என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. எல்லாம் அப்போது கைவிட்டு போயிருந்தது. றிசானாவுக்கு பிடித்தமான சொக்கலேட்டையும், உடுப்பையும் அங்கேயே வைத்துவிட்டு கனத்த இதயத்துடன் திரும்பிவிட்டேன் என்றார்..!
குறிப்பு - றிசானா மரண தண்டனை கைதியாகவிருந்த வேளையில் டாக்டர் கிபாயா சிறைச்சாலை சென்று றிசானாவை சந்தித்துவந்தார். இதனால் சில தடவைகள் றிசானா தனது தாயாருடன் தொலைபேசியில் உரையாடவும் முடிந்தது. சகோதரி றிசானா வபாத்தாகும்வரை டாக்டர் கிபாயா றிசானாவுக்கு ஆறுதலாகவும், உதவியாகம் இருந்துள்ளார். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சார்பில் நாம் டாக்டர் கிபாயாவுக்கு நன்றி சொல்கிறோம்..!
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
எமது சமூகத்தின் கன்னிப்பெண்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்கு செல்வதை நாம் கண்டும்
காணாமல் இருந்து விட்டு அங்கு ஏற்படும் விபரீதங்களுக்கு மாத்திரம் கண்ணீர் விட்டு எந்த
அர்த்தமும் ஏற்படப்படப்போவதில்லை .எனவே ஏழைகளை வாழவைப்பதற்காக இஸ்லாம் நமக்கு
காட்டித்தந்த கூட்டு சகாத் பொறிமுறையை ஒவ்வொரு பிரதேசத்திலும் நாம் ஆரம்பித்து இன்னும்
நம் நாட்டில் வசிப்பதற்கு இருப்பிடமின்றி காணப்படும் ஆயிரமாயிரம் றிஸானா போன்றவர்களுக்கு
உதவி செய்வதற்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக .மேலும் நம் நாட்டு முஸ்லிம் வர்த்தகர்கள்
இது போன்றவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் அவர்களின் வர்த்தகம் அவர்களுக்கு
நிச்சயமாக எவ்வித பலனையும் அளிக்கமாட்டாது .
Thanks to Dr. Kifaya
ReplyDeleteIf we did debate about whether poor get the Zakath or not than Zakath is continuous or one-off, will incident like this happen even in future? She went there for financial problem for her marriage & look after her family! :-(
ReplyDeleteம்ஹும்.... லேசில்ல்லல்ல்ள்ள....
ReplyDeleteIniyavazu Emazu pen Sahozarihalai Tholil puriya velinaduhaluku anupamal irupoam.............
ReplyDeleteமர்ஹூமா ரிஸானா பற்றிய ஒவ்வொரு தகவல்களும் எனக்கு கவலையளிக்கிறது. டாக்டர் அவர்களுக்கு அள்ளாஹ் நிறைவான கூலியை வழங்குவானாக! மேலும் சகோதரி ரிஸானாவுக்கு அள்ளாஹ் மேலான ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவானாக!
ReplyDeletejazakalla dr
ReplyDeleteJAZAKALLA DR
ReplyDeleteThanks Dr.Kifaya
ReplyDeleteHi Friends,
ReplyDeleteஆண்துணையின்றி ஹஜ்ஜுக்கு வந்த 400 நைஜீரியப் பெண் யாத்ரீகர்களை திருப்பியனுப்பி தங்களது இஸ்லாமிய மேதாவிலாசத்தை உலகுக்குக் காண்பித்த சவூதி அரசு ஒவ்வொரு வருடமும் தங்களது நாட்டின் பிரஜைகளுக்கு சேவகம் புரிவதற்காக ஆண்தணையின்றி வருகின்ற ஏழைநாட்டுப் பெண்களை மட்டும் எப்படி அனுமதிக்கின்றார்கள்?
தங்களது இளவரசர்களைக் கூட ஷரீஆச் சட்டத்திற்கு அமைவாக சிரச்சேதம் செய்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலன்றி மரண தண்டனையொன்றை தங்களால்கூட இரத்துச் செய்ய முடியாது என்றும் பெருமையடிக்கும் அரபு மன்னர்கள், அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்றி அவர்களது நாட்டுக்கே அனுப்பியதன் மர்மம் என்ன?
இந்த லட்சணத்தில் தமது சட்டம் இறைவனின் சட்டம் என்ற பம்மாத்து வேறு!
ரிசானா என்ற அப்பாவிச் சிறுமியை காப்பாற்ற வழியிருந்தும் கொன்று முடித்த அரபு உலகம் நிச்சயம் இதற்கெல்லாம் ஒருகாலத்தில் பதில் கூறியே ஆகவேண்டும். ஆண்டவனின் பெயரையும் அவனது சட்டத்தையும் சொல்லிச் சொல்லியே எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்?
வரதட்சனை வாங்கும், இளைஞர்கள் இருக்கும் வரை இந்த வெளிநாட்டுக்கு பெண்கள் செல்லும் சாபக்கேடு நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteGreat Person Dr.Kifaya,
ReplyDeleteMay allah the great provides you all the good and great things.
Mohamed Ismail