பௌத்தத்துக்கு எதிரான முஸ்லிம் குழுவுக்கு எதிராகவே போராட்டம் - ஜனாதிபதியிடன் பலசேனா
(Tm) 'இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று பொதுபல சேனா அமைப்பு, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது.
நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களான விமலஜோதி தேரர், விதாரன்தெனியே நந்த தேரர், கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோருடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் விரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வமைப்பினரிடம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவர்கள், 'பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
ஓ, அவர்கள் அழித்த பதிலோடு முடிஞ்சிட்டோ!
ReplyDeleteஅதை எவ்வாறு பிரச்சனைகள் கிளம்பாத வண்ணம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என deplomatic ஆக ஆலோசனை சொன்னார் போலும்
அன்பிற்குரிய இஸ்லாமிய நெஞ்சங்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇந்த கலந்துரையாடலில் குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இடம் பெறாதது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பௌத்தர்களின் கலந்துரையாடல் என்று கூட எடுத்து கொள்ளலாம். இங்கு பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் இவர்கள் வெளிக்காட்டுவர்களா? சந்தேகத்துக்கு மேல் சந்தேகமாக உள்ளது. " பௌத்த தர்மத்துக்கு எதிராக செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் " என்று இந்த பிக்கு சொல்கிறான். இவர்கள் எதைத்தான் சொல்கிறார்கள் ?????? இந்த சந்திப்பின் முடிவுதான் என்ன ? உண்மையில் சொல்லப்போனால் முஸ்லிம்களின் பொருளாதாரம் தான் இவர்களின் முக்கிய இலக்கு அடுத்து முஸ்லிம்களின் ஜமாஅத்களின் மத்தியில் பொய் குற்றச்சாட்டுகளை காட்டி அவர்களை மோதவிட்டு அவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தல், இங்குதான் நாம் அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். முக்கியமாக கண்மணி ரசூல் (ஸல்) அவர்கள் காட்டி தந்த பொறுமையை கடைபிடிப்போமாக. "எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்".
வஸ்ஸலாம்.
allah with us
ReplyDeleteஇவர்களுக்கு பின்னால் சில தீய சக்திகள் இருக்கின்றது, அந்த தீயவர்களில் ஒரு கூட்டமாக சியாக்கள்(ஈரான்) இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteஇவனுகளின் குறி யார் குர்ஆன் ஹதீஸ் மாத்திரம் தான் இஸ்லாம் என்கிறார்களோ அவர்கள் தான் (சில முஸ்லிம் குழுக்கள்)இவனுகளின் இலக்கு.