Header Ads



விரைவில் 'அசிட்' மழையும் பெய்யலாம் - விஞ்ஞானி அனுர பெரேரா எச்சரிக்கை



அண்மையில் அடிக்கடி பெய்த சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற மழை வீழ்ச்சிகளுக்குத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இராசாயனப் பொருள்களே காரணமாகியுள்ளன என்று புதிய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள் நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைகின்றன. இதனால் இந்த விதமான நிறங்களில் மழை பெய்கிறதேயன்றி அதற்கும் எரிநட்சத்திர மழைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் கோள்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

சாதாரணமாகத் தினமும் ஒன்பதுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் எரிநட்சத்திரம் அல்லது விண்கல் மழை வீழ்ச்சிகள் ஏற்படுவதாகவும், மூன்று  நான்கு தொன்கள் வரையிலான விண்கற்கள் பூமியின் மேற்பரப்பில் விழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு விழும் விண்கற்களில் எந்தவொரு நுண்ணுயிரும் வாழ முடியாது. அவற்றின் மூலமாக வர்ண மழைகள் ஏற்படுவதற்கு எந்தவொரு சாத்தியமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள தொழிற்சாலைகளிலும் இருந்து வெளியேறும் இரசாயனப் பொருள்கள் வாயு மண்டலத்தில் கலப்பதால் இவ்வாறான வர்ண மழைகள் பெய்கின்றன.

விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாது விட்டால் காலப்போக்கில் "அசிட்' மழைகளும் கூட பெய்யக் கூடும் எனவும் அது சுற்றுப்புறச்சூழலுக்கு அச்சுறுத் தலாகி விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.