உப்பு + சீனி அதிகமாக பயன்படுத்தாதீர் - சுகாதார அமைச்சு கோரிக்கை
(Sfm) வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் பானங்களில் அடங்கியுள்ள உப்பு மற்றும் சீனி என்பவற்றைக் குறைப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் அவ்வாறான உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் சீனியின் அளவு சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அளவுகளுக்கேற்ப உணவு வகைகளுக்கு உப்பும் சீனியும் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒருவர் 5 மேசைக்கரண்டிக்கும் குறைவான சீனியைப் பயன்படுத்த வேண்டியுள்ள போதிலும் இலங்கையில் 9 மேசைக்கரண்டிக்கும் அதிகமான சீனியை மக்கள் உட்கொள்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளாந்தம் ஒரு மேசைக்கரண்டி உப்பையே ஒருவர் பயன்படுத்த வேண்டியுள்ள போதிலும் இலங்கை மக்கள் 4 மேசைக்கரண்டிக்கும் அதிகமான உப்பைப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment