Header Ads



முஸ்லிம்களுக்கு வர்த்தகம் செய்ய முடியவில்லை - முஸ்லிம் அமைச்சர்களோ ஓடிஒளிகிறார்கள்

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு அம் மக்களுக்குள்ள வர்த்தகம் செய்யும் உரிமை தடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பதில் கூறாது முஸ்லிம் அமைச்சர்கள் ஒழிகின்றனரென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் மீதான விவாதத்தின் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இன்று முஸ்லிம்களுக்கு வர்த்தகம் செய்ய முடியவில்லை. அம் மக்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றது. இனவாதத்தை தூண்டிவிட்டு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறவே அரசு முயற்சிக்கின்றது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை கொண்டு வருகின்றது என்றார். vi



5 comments:

  1. well says
    where is our muslim ministers statement in parliment

    ReplyDelete
  2. முஸ்லிம் அமைச்சர்களுக்கு ரோசம் வரும் அனா வராது. உங்களுக்கு இருக்கும் அக்கறை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது மன வேதனை.

    ReplyDelete
  3. தங்களது செய்தியை வாசிக்கும் போது நெஞ்சி கனத்துப்போகிறது, அழுகையும் வருகிறது.
    நல்லதோ கெட்டதோ லக்ஸ்மன் கிரியல்ல முஸ்லிம் சமுகம் இன்று எதிர் நோக்கும் பிரச்சினைய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கதைத்திருப்பதை பார்க்கும் போது முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கதைக்கக்கூடிய வீரியம் உள்ள ஒர் ஆண் மகன் பிற சமுகத்தில் தான் இருக்கிறானோ என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
    இருந்தும் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு புதிய புதிய கட்சிகளை உருவாக்கிக்கொண்டு பொட்டைகள் போல் வாய் மூடி மவ்நியாக, முதுகெலும்பில்லாத தானைதளைவர்களாக, முக்காடு போட்டுக்கொண்டு கதிரைகளை சூடாக்கிக்கொண்டு,அரசின் சலுகைகளைப்பெற்றுக்கொண்டு தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு வாழ்பவர்களை நினைக்கும் போது பாவம் போல் தோன்றுகிறது.வருகிற தேர்தல்களில் எப்படித்தான் தமது சமுகத்தை முட்டால்களாக்கப்போகிரார்களோ தெரியல்ல. காலம் பதில் சொல்லும். முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் எனும் பெயர்களில் மக்களை முட்டாள்களாக்கி, குரானையும் ஹதிஸையும் அடமானம் வைத்து பிளைத்துக்கொண்டிருக்கும் எல்லா அரசியல் வாதிகளும் இதற்கு போருப்பனாவர்களே. சிந்தித்து வாக்களித்த சமுகத்திற்காக செயற்படுங்கள். ஏறுதா என்று பார்ப்போம்.....
    AHAMED

    ReplyDelete
  4. கிரியெல்லைக்கு நன்றிகள் எதற்கென்றால் ஆடு நனைகிறதென்று ஓநாயாவது அழுகிறதே! ஐ.தே.க.ஆரம்பித்து வைத்ததை படிப்படியாக நடைமுறைப்படுத்தி உச்ச கட்டத்துக்கு மஹிந்த கொண்டு வந்து விட்டார்,(1982 ல் ஜே.ஆர் ஆரம்பித்து இன்று மஹிந்தவினது ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது) எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த இனவாதிகளை ஊட்டி வளர்ப்பதில் பின்நோக்க மாட்டார்கள். இது தான் 1956 முதல் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  5. முஸ்லிம் பேர்தாங்கி அரசியல் வாதிகளே! அல்லாஹ்வைப்பயந்து கொள்ளுங்கள் நீங்கள் மௌனம் காக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் சமூகத்துக்கு எதிரான குழி ஆழமாகிக்கொண்டே போகும் பின்னர் உங்களால் கைசேதப்படமட்டுமே முடியும் இன்று உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அரசுக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டமும் யுத்தமும் செய்து வெற்றிபெற்று வருவதை அறிவீர்கள அப்படியோரு இங்கு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும் அந்த நேரம் நீங்கள் எல்லோரும் ரெம்ப கேவலப்படுவீர்கள் ஒரு நாட்டை ஆண்ட கதாபி சாக்கடைக்குள் மறைந்திருந்து கொல்லப்பட்டதை நினைவு படுத்துகிறேன் பட்டம் பதவிகளை அல்லாஹ் ஒரு அமானிதமாக தருகிறான் அதற்கு நீங்கள் மாறு செய்தால் விளைவு இங்கும் கிடைக்கும் மறுமையிலும் கிடைக்கும். இங்கு ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாக அறிகிறோம் அரசியல்வாதியைவிட அடுத்தவந்தான் அங்கும் வாய்திறந்து பேசுவான் ரோசமுள்ள ஆண்மக்களாக நீங்கள் இருந்தால் எல்லோரும் உங்கள் பட்டம் பதவிகளை துறந்து சமூகத்துக்காக போராட முன்வாருங்கள் வாய்பேச முடியாத இந்த பதவி இருந்தென்ன இழந்தென்ன தயவு செய்து அல்லாஹ்வுக்காக உங்கள் நிலைப்பாட்டில் மற்றத்தை வெளிப்படுத்துங்கள் நாம் எல்லோரும் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம் அதே நேரம் அதற்கான முயற்சியும் இருக்க வேண்டும் இல்லியா??

    ReplyDelete

Powered by Blogger.