கல்குடாவில் இனவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் (படங்கள்)
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
அகில இலங்கை கல்குடா கிளையின் ஏற்பாட்டில் நடை பெற்ற இனவாதத்தை தூண்டும் குழுக்களுக்கெதிரான எதிர்ப்புப்பேரணி இன்று வெள்ளிக்கிழமை 18.01.2013 ஜூம்ஆ தொழுகையின் பின் இடம் பெற்றது. இதில் பெருத்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அரசியலுக்காக இனவாதத்தைத் தூண்டாதே,இனவாதம் பேசி அரசியல் வளர்க்காதே, ஒற்றுமையாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் உறவில் தழிழ் கூட்டமைப்பு பிளவை ஏற்படுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கொண்டு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தை நோக்கி வந்து பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினையும் சமர்பித்து விட்டு அமைதியாக களைத்து சென்றனர்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட கிரான்,வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களை கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுடன் இணைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் கர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அக்கர்த்தால் முறையாக அனுஸ்டிக்கப்படவில்லை.
ஏன் என்றால் கடந்த 30வருட யுத்தம் தமிழ் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை சிதைத்து காயப்படுத்திருத்தது. யுத்தத்தின் பின்னர் மக்களிடையே இன முறன்பாடுகள் களையப்பட்டு சந்தோஷமான வாழ்கைக்கு மக்கள் தயாராகின்ற போது வெறும் மொன அரசியல் அபிலாசைகளுக்காகவும் பதவி மோகம் கொண்டதன் காரனத்திற்காக மக்கள் மத்தியில் வன் முறைகளை ஏற்படுத்த தூண்டுவதும் தேவையற்ற கர்தால் அனுஷடிக்கபடுவதும் மற்றய தரப்பு பேரணி நடாத்துவதும்மென இதனை சந்தர்பமாக பயன்படுத்தி அரசியல் வாதிகள் பிரபல்யமடைவது என்பது வேடிக்கையாகும் வடகிழக்கை பொறுத்தவரைக்கும் மக்களின் தேவை அவர்களின் எதிர்பார்ப்பு வெறும் செல்லா காசுகளாக மாறிவிட்டமை மிகவும் வேதனை தரக் கூடிய விடமாகும்
அன்பார்த்த தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளே இவ்வாறான பிரச்சினைகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்படுகின்ற போது மிகவும் கவனமான இருத்து சிந்தித்து செயல்படவேன்டும் அதற்கு மாறாக அந்த அரசியல் தலைமை அவ்வாறு கூடியது இவ்வாறு கூறியது என்பதற்காக வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுக்க கூடாது ஒற்றுமைபட்ட இலங்கையில் தமிழ்; பேசும் மக்கள் நாம் என்ற உணர்வுடன் செயல்படவேன்டும்.இப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பு அரசியல் தலைமைகள் நியாயமான விட்டு கொடுப்புக்களை செய்து அன்ணண்,தம்பி என்ற உறவு நீடிந்து நிலைத்திருக்க வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் விரும்பாத சமூக அணியாக அணி திரள்வோமாக.
Post a Comment