Header Ads



காத்தான்குடியில் மீலாத் தினத்தையிட்டு இரத்ததான நிகழ்வு


கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தையிட்டு வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013  காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடிக்கடி நிகழும் இரத்த பற்றாக்குறையால் ஏற்படும் உயிர்  ஆபத்துக்களை தவிர்க்கவும் சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்கவும் இவ்இரத்ததான திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த இரத்த தான நிகழ்வில் 140 ஆண்களும் 63 பெண்களுமாக மொத்தமாக 203பேர்கள் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.