விமல் வீரவன்ச கம்பி எண்ணுவாரா..?
அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசிய கட்சியின் தென்மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மைத்திரி குணரட்ன உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் மனுவொன்றை கையளித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரித்த தெரிவுக்குழு தொடர்பில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட விளக்கம் குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்தை சட்டத்தரணி மைத்திரி குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு..!
எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு தேவையான அனைத்து பின்னணி கதைகளையும், பூரண சர்வதேச பிம்பங்களையும் உருவாக்க பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தமது பதவியை பயன்படுத்துகிறார் என்று தாம் சம்பவத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்தார். தற்போது தெளிவாக புலப்பகிறது, மேம்முறையீட்டு நீதிமன்றம் இந்த கருத்தை கூறவில்லை.மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது. திருடனின் தாயிடமே தஞ்சம் கோருவது போன்ற செயற்பாடே இங்கு இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தின் தலைமையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவே நிர்வகித்து வருகின்றார் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம்சுமத்தியிருந்தார்.
Post a Comment