தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி செல்வதற்காக வீதிகள் புனரமைப்பு (படங்கள்)
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பித்து வைத்தல் மற்றும் புதிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5ம் திகதி வருகை தரவிருப்பதனை முன்னிட்டு ஜந்து நாட்களுக்குள் ஒரு கிலோமீற்றர் வீதியை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று 30-01-2013 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவாளர் எச். அப்துல் சத்தார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பொறியயாளர் ஏ.எம். றியாஸ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்தி வேலைகளையும் பார்வையிட்டதுடன் அவகளையும் துரிதமாக மேற்கொள்வதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டன.
என்ன நடக்கப் போகின்றது என்பதனை உணராமல் வினையை வரவேற்கும் புத்தி சீவிகள். அம்பாறையில் ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் தென்கிழக்கின் நிலை என்னவாகும். உபவேந்தர் அம்பாறையில் இருக்கவும் நேரிடலாம்.
ReplyDeleteஇந்த பலகலைக்கழகம் நமது சில மாணவர்களால் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை..!
ReplyDeleteநமது பீடத்திற்கு நம் மக்களே முக்கியத்துவம் அளிக்காத சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் முக்கியத்துவம் அளிப்பார் என நினைப்பது மடமை.