Header Ads



நாட்டில் சர்வதிகார ஆட்சி உருவாக்கப்படுகிறது - சஜித் பிரேமதாசா


நாட்டில் சர்வாதிகார ஆட்சி உருவாக்கப்பட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் அரசியல் அமைப்பை மீறிச் செயற்படுகின்றது அத்துடன் ஆட்சியிலுள்ள அரசாங்கம் இது ஓர் அதிசயமான அரசாங்கம்,  ஒரு சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பு நியாயமானது, மறு சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பு பிழையானது என கூறுகின்றது.

அன்று உச்ச நீதிமன்றம் சந்திரிக்கா அரசாங்கத்திற்கு வழங்கிய உத்தரவு சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த அரசாங்கம் தமக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகின்றது.

நீதிமன்றின் உன்னத தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவே ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தையும் பாதுகாக்க நாம் வீதியில் இறங்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.