குறிதவறிய குண்டுகளின் விளைவு - எகிப்தில் பொலிஸாருடன் பொதுமக்கள் மோதல்
எகிப்து நாட்டில் உள்ள ஷுப்ரா அல்-கிய்மா என்ற இடத்தில் போதைப் பொருள்
கடத்தல்காரர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டிச் சென்றனர். தப்பியோடிய
குற்றவாளியை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டபோது, குறி தவறி பாய்ந்த குண்டு,
தெருவோரம் நின்றிருந்த ஒருவர் மீது பாய்ந்தது. ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அவர்,
துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த படுகொலையை கண்டித்த
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு
முதல் நேற்று பகல் வரை நீடித்த இந்த மோதல் முற்றியதால், பொதுமக்களை நோக்கி போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் குண்டு
பாய்ந்து பலியாகினர். 3 போலீசார் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
Post a Comment