Header Ads



'ஒரு கல்விமான் தடம்பதித்த சில பதிவுகள்' கையேடு வெளியீடு


(எஸ்.எல். மன்சூர்)

பிறப்பதும், இறப்பதும் மனிதவாழ்வாகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் செய்த நல்லவிடயங்கள் மாத்திரமே இந்த உலகில் நின்று நிலைப்பதுடன், அந்த விடயங்கள்தான் நாளை மறுமையிலும் எமக்கு துணைபுரியும். அந்த அடிப்படையில் பிறந்து வாழ்ந்து இறந்ததன் பின்னரும் அந்த மனிதரை நினைவிற் கொள்ளத்தக்கதான நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்றால் அந்த மனிதரின் சேவைகள், நடத்தைகள் போற்றத்தக்கதாகும். நினைவுகூறத்தக்கதாகும். அத்தகையதொரு விடயம் நேற்று முன்தினம் அட்டாளைச்சேனையில் நடந்தேறியுள்ளது. 

அண்மையில் வபாத்தான(மரணமான) தென்கிழக்கின் முதற் விஞ்ஞானப் பட்டதாரியும், பல்கலை வேந்தனுமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ. சம்சுதீன்(டீ.ளுஉ) அவர்களது நாற்பதாவது நினைவு நாளை நினைவுகூரும் முகமாக அன்னாரது உடன்பிறந்த சகோதராரன அல்ஹாஜ். எம்.ஏ.எம். சுபைதீன் (துP) அவர்கள் 'ஒரு கல்விமான் தடம்பதித்த சில பதிவுகள்' என்னும் சிறுகையேட்டின் ஊடாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

அக்கையேட்டினை வெளியிட்டுவைக்கும் நிகழ்வு எம்.ஏ.எம். சுபைதீன் இல்லத்தில் நடைபெற்றது. அக் கையேட்டில் மர்ஹூம் எம்.ஏ. சம்சுதீன் அவர்களது இளைமைக்காலத்திலும், அதன்பின்னராக காலத்திலும் இப்பிராந்தியத்தில் தடம்பதித்த அத்தனை விடயங்களையும் விலாவாரியாக சுருக்கமாக வெளிக்கொணர்ந்துள்ளமை எதிர்காலத்தில் சாதனை படைக்கவிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வெளியீட்டு நிகழ்வில் அல்ஹாஜ் எம்.ஏ.எம். சுபைதீன் கையேட்டை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிஸ். என்.எம்.அப்துல்லாஹ்வுக்கு வழங்குவதையும், அருகில் கவிஞர் அன்புடீன் நிற்பதையும், அல்ஹாஜ் எம்.ஏ.எம். சுபைதீன் உரையாற்றுவதையும், வெளியிடப்பட்ட கையேட்டையும் படங்களில் காணலாம்.



No comments

Powered by Blogger.