Header Ads



பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைமை பதவிக்கு ஹமாஸ் போட்டி..?


(Tn) மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (ஏ.எல்.ஓ.) அடுத்த தலைமை பதவிக்கு அதன் எதிரி அமைப்பான ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் போட்டியிடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் அல் குத்ஸ் அல் அரபி நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பலஸ்தீன சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் ஜோர்தான், கட்டாரை பிரதானமக்காக் கொண்ட ஒரு சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு பி.எல்.ஓ.வின் தலைமையை ஏற்க அழுத்தம் கொடுப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதில் பி.எல்.ஓ. தலைமை பதவிக்கு அப்பாஸ் போட்டியிடாத பட்சத்தில் கட்டார் மிஷாலுக்கு ஆரவளிப்பதாக மஹ்மூத் அப்பாஸிடம் கட்டார் நாட்டு தலைவர் கூறியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1968 தொடக்கம் முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் பதா அமைப்பின் ஆதிக்கத்தில் இருக்கும் பி.எல்.ஓ., ஒஸ்லோ உடன்படிக்கைக்கு அமைய இஸ்ரேல் தேசத்தை அங்கீகரிக்கிறது. எனினும் ஹமாஸ் அமைப்பு இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.


இந்நிலையில் எகிப்தில் கைச்சாத்தான அமைதி உடன்படிக்கையின் படி பி.எல்.ஒ. அமைப்புக்கான பிரதிநிதிகள் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் பி.எல்.ஓ. தலைமை அதன் நிறைவேற்றுக் குழுவே தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த நிறைவேற்றுக் குழுவை தேர்தல் மூலம் தேர்வான பாராளுமன்றமே நியமிக்கவுள்ளது.


No comments

Powered by Blogger.