Header Ads



ஏறாவூரில் வெள்ள பாதிப்பு - பாடசாலைகளில் மக்கள் தஞ்சம் (படங்கள்)


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள ஏறாவூர் பிரதேச மக்களை கிழக்கு மாகாண  விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (25.01.2013) நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்குத் தேவையான உணவு, மற்றும் உறங்குவதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார்.

ஏறாவூர் தாமரைக்கேணி அலிஸாஹிர் மஹா வித்தியாலயத்தில் என்பது (80) குடும்பங்களும், ஹிஸ்புல்லாநகர் அஸ்ரப் வித்தியாலயத்தில் நூற்று அறுபத்தொன்பது (169) குடும்பங்களும் ஸதாம் ஹுசைன் முஹாஜிரீன் கிராமத்தில் நூற்று அறுபத்தெட்டு (168) குடும்பங்களும் இடம் பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வெள்ள அனர்த்தம் பற்றி கேள்வியுற்றதுடன் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விரைந்து இடம்பெயர்ந்த மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சரோடு அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அபுல் ஹஸன், மற்றும் எஸ்.எம்.றிபாய், முன்னாள் பிரதேச சபை தலைவர் எம்.சி.கபூர், ஏறாவூர் தபால் அதிபர் ஏ.நஸீர் உட்பட பல அதிகாரிகளும் இவ் விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.








1 comment:

  1. masha allah ungalathu savaihal thodarattum, allah ungalukku nalle aarokkiyetthai thara vandum

    ReplyDelete

Powered by Blogger.