சவூதி அரேபியாவில் முதலாளியினால் தாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட இலங்கை பெண்
(Tm) சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண், அவரது முதலாளியினால் இரக்கமின்றி தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுகின்றன. அத்துடன், தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் கூறினார்
யார் செய்த குற்றம் ?
ReplyDeleteபெண்களை பொக்கிசங்களாக பாதுகாக்க தெரியாத நம் சமூகம் செய்த குற்றம் .
இறைவனே ஆண்களை பெண்களின் பராமரிப்பாளர்களாக நியமித்திருகிறான்.
நமக்குத்தான்
நாய் வாண்டா என்ன ?
நரி புள்ள பெத்தா என்ன?
Saudians always correct and employers only violence against them.If this lady go to court then given sharia justice that lady should go jail 5 years.
ReplyDeleteSharia real islamic law not follow saudians,they follow only their own sharia law.