Header Ads



முஸ்லிம் தலைமையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு முஸ்லிம்களுடையது


(Tm) உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள்நிர்ணய விடயத்தில் முஸ்லிம் மக்கள் உட்பட ஏனைய  இனங்களின் நலன்களையும் பாதுகாக்கக் கூடிய முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன் இந்த எல்லை மீள்நிர்ணயம் விடயத்தில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்கும் விதமாகவும் நாம் நடந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்த்pல் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றுகையில் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தமிழர் பிரச்சினைக்கு கௌரவமான ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று விருப்பம் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமானவர்கள் இடையே காணப்படுகின்றது. முஸ்லிம் மக்களும் அவ்வாறே விரும்புகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை தருகின்றோம் என்று பகிரங்கமாக  கூறினோம். 

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஏற்க முன்வரவில்லை. துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் அரசியல் தலைமை அதற்கு ஆதரவாக காணப்படவில்லை. முஸ்லிம் தலைமை வேறு பல காரணங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதையே விரும்புகின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. இனப் பரம்பலை மாற்றாத விதத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்" என்றார்.

5 comments:

  1. ஐயா சம்பந்தன் அவர்களே!

    நீங்கள் சொல்வது உண்மை..! அனால் உங்களை நம்பி அரசியலில் இறங்குவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதுபோல், தமிழர்கள் செய்த இனச்சுத்திகரிப்பில் இருந்து மீளாதா நிலையில் இன்னும் இன்னும் வாட மாகாணத்தில் அடக்கு முறை பிரயோகிக்கும் சில தமிழ் அதிகாரிகளை தட்டிக்கேக்காத உங்களை எவ்வாறு நம்புவது உங்கள் சொற்கள் செயலாக மாறட்டும். முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டுவாருங்கள் நாங்கள் நேரடியாக உங்களுக்கே வாக்களிக்கிறோம்.

    "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்று நாங்களும் கற்று இருக்கிறோம்

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும் சம்பந்தன் ஐயா,

    நீர் சரியாக நினைத்தீர் , பிழையாக சொன்னீர் .

    "முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சிந்தனையில் மாற்றம்" அல்ல மாறாக "முஸ்லிம் மக்களின் சிந்தனையில் மாற்றம் வேண்டும்".

    "முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சிந்தனையில் மாற்றம்" - அவர்கள் தான் சிந்திப்பதே இல்லையே.

    தம்பி முல்லா மன்னிக்க வேண்டும் -

    1)அது பாசிச புலிகள் செய்த இனச் சுத்திகரிப்பு.
    (தமிழ் மக்கள் எல்லோரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல).

    2)நாமும் பல மண்குதிரைகளை (சமூக பற்று இல்லாத) பாராளுமன்றத்துக்கும், உள்ளூர் ஆட்சி மன்றங்களுக்கும் சுகபோக வாழ்க்கைக்காக அனுப்பி உள்ளோம் .

    ReplyDelete
  3. ஐயா ahamed அவர்களே...!அன்று செய்தது பாசிச புலிகள்
    இன்று செய்வது பசுத்தோல் போர்த்திய புலிகள்.

    ReplyDelete
  4. சம்பந்தரே ஆடு நணைய ஓநாய் அழுத கதை கேள்விப்பட்டுள்ளோம் இது புதுக்கதையோ???

    ReplyDelete

Powered by Blogger.