Header Ads



அமெரிக்காவில் இப்படியும் ஒரு ஆய்வு..!


உங்கள் பாஸுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறதா? உங்களுக்கு சம்பள உயர்வு கட்டாயம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு. அமெரிக்காவின் ஆல்பர்க் மற்றும் மேரிலேண்ட் பல்கலைக்கழகங்களின் பொருளாதார பேராசிரியர்கள் மைக்கேல் டால், கிறிஸ்டியன் டெசோ, டேவிட் காடிஸ் ரோஸ் ஆகியோர் சேர்ந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். ஆய்வு அறிக்கையை சமீபத்தில் நடந்த அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் தாக்கல் செய்தனர். 

அதில் கூறியிருப்பதாவது: உங்கள் முதலாளியின் மனைவி முதல் முறை கர்ப்பமாகி இருக்கிறாரா? அவருக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கும் உங்களது சம்பள உயர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம். உங்கள் சம்பளம் கட்டாயம் உயரும். அதே நேரம், ஆண் குழந்தை பிறந்துவிட்டால் உங்கள் சம்பளம் குறையக்கூட வாய்ப்பு இருக்கிறது

No comments

Powered by Blogger.