எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக்களை உடனடியாக அறியப்படுத்துங்கள்..!
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்கள் உடனடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அல்லது கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய எல்லை நிர்ணயக் குழுவானது எல்லை நிர்ணயம் தொடர்பிலான தனது அறிக்கையினை மே மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதால், முஸ்லிம் மக்கள் தமது பிதேசங்கள் பற்றிய எல்லை நிர்ணயம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமாயின் அவை குறித்து உடனடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்துக்கோ அறிவிக்குமாறு வேண்டுகின்றேன்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் எல்லை நிர்ணயம் குறித்து அதிகபட்ச அவதானத்தோடு நாம் இருந்து வருகின்றோம். ஆயினும், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எமது அவதானத்துக்கு அப்பால் தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றுள்ளதாக நீங்கள் கருதுவீர்களாயின் அவை குறித்து உடனடியாக அறியத்தாருங்கள்.
இவ்விடயமானது அரசியல் சார்ந்ததல்ல என்பதால், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சிவில் மற்றும் சமூகசேவை அமைப்புக்களும் இவ் விவகாரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது புதிய முறைமையின் பிரகாரம், 70 வீதம் வட்டார அடிப்படையிலும், 30 வீதம் வீதாசார அடிப்படையிலும் இடம்பெறவுள்ளது. எனவே, இதற்கென புதிதாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக, குறித்த ஒரு பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் முறையாக இடம்பெறவில்லையாயின், அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புகள் அல்லது இழப்புகள் ஏற்படும் நிலை உருவாகும். எனவே, இவ்விடயத்தில் முஸ்லிம் மக்கள் மிகவும் கரிசனையுடன் செயற்படுமாறு வேண்டுகின்றேன்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிசுக்குத் தெரியப்படுத்தப்படும் முஸ்லிம் மக்களின் மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் சம்பந்தப்பட்டவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு செல்லும் என கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கடந்த 2012 டிசம்பர் 15ஆம் திகதி மாதம் உள்ளூராட்சி எல்லைகள் மீள் நிர்ணய குழுவை உள்ளோர்ரட்சி மாகான சபைகள் அமைச்சர் அதாவுல்லாஹ் நியமனம் செய்து அவர்கள் நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகளை துரிதப் படுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்க , நீங்கள் மீள் நிர்ணயம் தொடர்பான மாற்றுக் கருத்துக்களை இப்பொழுது கேட்பது வியப்பாக இருக்கிறது, மாற்றம் காண வேண்டிய எல்லைகள் தொடர்பான அபிப்பிராயங்களை மக்கள் மத்தியில் சென்று மீள் நிர்ணயக் குழுவுக்கு வாங்காது ஏன் இந்த அறிக்கை என்பது நமக்கு புரியவே இல்லை.
ReplyDeleteஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் என்ற விவகாரம் இன்று நேற்று அல்ல 2010 ஆம் ஆண்டு உள்ளோர்ரட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது முதல் அரசினாலும் பேரின சக்திகளினாலும் ஆராயப்பட்டு வந்த தேசிய நிகழ்ச்சி நிரல்.
முஸ்லிம்காங்கிரஸ் உற்பட முஸ்லிம் கட்சிகளின் ஆதரவோடுதான் இந்த சட்டமூலம் மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் அங்கீகாரம் பெற்றது, அமைச்சர் அதாவுள்ளஹ்வின் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சே இதற்கு பொறுப்பாகும், அந்த சட்டமூலம் அமுலுக்கு வரமுன் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப் படுவதற்கான குவினை அமைச்சர் நியமிக்க வேண்டும் என சட்ட மூலத்தில் இருந்தது.
இந்த விவகாரம் சிருபாணமி சமூகங்களின் அடிமட்ட அரசியல் அதிகாரங்களில் கைவைக்கின்ற பல்வேறு அமசங்களைக் கொண்டுள்ளதாக நாம் ஏற்கனவே ஊடகங்களில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இது அரசியல் சார்ந்ததல்ல என்று முஸ்லிம்களின் உரிமைக்குரல் எனவும் அதிகாரப் பகிர்வில் பரவளாக்களில் முஸ்லிம்களது உரிமைகளைக் காக்க அமைக்கப் பட்ட முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் ஒரு மாகாண அமைச்சர் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
அமைச்சர் அவர்களே! வடகிழக்கிற்கு வெளியே மட்டுமல்ல வடகிழக்கிலும் உடனடியாக உள்ளோர்ரட்சி மன்றங்களின் எல்லைகள் மீல்நிர்ணயம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூராட்சி தேர்தல் தொகுதி வாரியாகவும் மக்களுடன் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து இந்த விடயம் குறித்து ஆராய குழுக்களை அமைத்து விரைவாக செயற்படுங்கள். ஜனவரி 31 வரையும் தான் மக்கள் கருத்துச் சொல்லலாம். மே 31 இல் அறிக்கை பூரணப்படுத்தப் படும்.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் தனி முஸ்லிம் பிரதேச சபைகள் உள்ள இடங்களில் பிரச்சினை இல்லை, எந்தக்கட்சி வென்றாலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது. ஆனால் முஸ்லிம் சிறுபான்மையாகவுள்ள பிரதேசங்களில் , பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு எல்லைநிர்ணயம் செய்யப்படவேண்டும். சிங்கள பிரதேசங்களில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ் நிர்வாக மாவட்டங்களில் இது சரியாக நடக்கும், எனவே ஒவ்வொரு பிரதேசங்களிலும் எவ்வாறு அமைய வேண்டுமென அரசியல் பேதமின்றி , துறைசார்ந்தவர்களையும் சேர்த்து அவ்விடங்களிலே உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டும். இவ்வாறு அபிப்பிராயம் கேட்டு அதற்கு எல்லோரும் அறிக்கை அனுப்பினால் அதை பிரித்து பார்ப்பதற்கு முன்பே தீர்மானத்தினை அமைச்சு எடுத்து தேர்தலும் நடந்து விடும். நஸீர் அஹமட் அவர்களே, நீங்கள் ஏதோ செய்வதாக காட்டுவதற்காக அறிக்கை விட்டிருக்கிறீர்கள் என்பது ஏமாளி மக்களுக்கு புரியாவிட்டாலும் சிலருக்காவது புரியும் , இது நமது சமூகப்பிரச்சினை என்பதை மறந்து விடக்கூடாது. அதுசரி குறைந்தது ஏறாவூர்ப்பற்றில் உள்ள எல்லைகளை பற்றியாவது உங்களுக்குத் தெரியுமா? மேலும் தெரிவு 70%, 30% எப்படி என்பது கூட உங்களுக்குத் தெரியாது என்பது எனது அபிப்பிராயம்! ஏன் அமைச்சரே சமூகத்தலைவர் போல உங்களை நினைத்து மக்களை ஏமாற்றுகிரீங்க?
ReplyDeleteஏதோ சகோதரர் இனாமுல்லாஹ் சொல்லி இருப்பதைப்போல பலவிடயங்கள் இருக்கின்றன, எனவே சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் , துறைசார்ந்தவர்கள் இதுசம்பந்தமாக கவனம் எடுக்க வேண்டும். மலையக தமிழர்களுக்குள்ள சமூகப்பற்று நம் அரசியல் தலைமைகளுக்கு இல்லையே!