சவுதி அரேபியாவில் ஆண், பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்புச்சுவர் உத்தரவு
உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்ட திட்டங்களின் கீழ் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆணும் பெண்ணும் தனியாக சந்தித்து பேசுவது, பழகுவது போன்ற செயல்கள் அந்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் சவுதியில் உள்ள பெண்கள் உள்ளாடை விற்பனை மையங்களில் வேலை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டு, சவுதி பெண்களை பணியமர்த்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
தற்போது, சவுதி அரேபியாவில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் எல்லா இடங்களிளும் 5 அடிக்கு மேற்பட்ட உயரமான தடுப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடங்களில் ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக வந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சவுதி தொழிலாளர்கள் நல மந்திரி அப்டெல் பகி தெரிவித்துள்ளார்.
Hi Friends,
ReplyDeleteஎந்த வகைக் குற்றமானாலும், குற்றம் புரிவதற்கான தேவையும், தூண்டுதலும் சமூகத்தில் இருக்கும் வரை குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது. சட்டம் போட்டு மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியும் என்பது கடல்நீரைக் காய்ச்சி சர்க்கரை எடுக்கலாம் என்பது போன்று அபத்தமானது