ஓடிக்கொண்டிருந்த மாணவி வடிகானில் விழுந்து மரணம்
மரதன் ஓடிக்கொண்டிருந்த மாணவி வடிகானில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று சிலாபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் நடைபெறவிருக்கின்ற இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கௌசல்யா பவித்ராணி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வடிகானில் விழுந்த மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. Tm
Post a Comment