மூதூர் பிரதேசசபை செயலாளர் தலையீடு - சுனாமி கலந்துரையாடல் நிறுத்தப்பட்டது
(Murasil)
மூதூர் பீஸ்ஹோம் நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடலொன்று மூதூர் பிரதேச செயலாளரின் தலையீட்டைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டு இற்றைவரை நிரந்தர வீட்டைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வீட்டைப் பெற்றுக் கொடுக்கும் பணியில் உதவும் நோக்கில் பீஸ்ஹோம் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதய நிலைமையை அறிந்து கொள்வதற்காக கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. இக் கலந்துரையாடலே இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக எல்லைக்குள் கலந்துரையாடலொன்றை எவராவது நடாத்துவதாக இருந்தால் பிரதேச செயலாளரின் முன் அனுமதி பெறப்படவேண்டுமென பிரதேச செயலாளர் என். பிரதீபனால் கூறப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த கலந்துரையாடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான அமீர் எஸ்.ஹமீட் தலைமையில் இயங்கும் ஒரு நிறுவனமே பீஸ்ஹோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment