Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த



(அபுதீனா)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகை தொடர்பான கலந்துறையாடல் இன்று 28-01-2013 தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்கா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் , எம்.எல்.ஏ. அமீர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண,  ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் உட்பட பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.




5 comments:

  1. என்ன?
    அமைச்சர்கள் அதாவுல்லாஹ்வுக்கும், உதுமலெவ்வைகும் கல்வியில் இவ்வளவு அக்கறையா ?

    ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை இன்னமும் முடிந்த பாடில்லை!

    ஒருவேளை தன் மகனை தன் ஊருக்கு மேயர் ஆக்கியதுபோல் பல்கழைகழகத்துக்கும் வேந்தர் ஆக்குவோம் என்று நினைத்திருப்பாரோ?

    ஜனாதிபதி பல்கழைகழகத்துக்கு மழை வெள்ளம் வடிந்ததை பார்க்க வருகிறாரா? அல்லது அப்படியே நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தையும் மக்களிடம் கையளிக்கிறாரா?

    ReplyDelete
  2. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சி ஒருபடி மேலே செல்லும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வீணான எமது
    அரசியல் வேறுபாடுகள் மற்றும் பிரதேச வேறுபாடுகள் போன்றவற்றை ஒரு புறம் ஒதுக்கி விட்டு
    இது போன்ற அரிய சந்தர்ப்பங்களை எமது சமூகம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  3. Ya allah kalviye pathi yarellam poi sinthikkirage.

    ReplyDelete
  4. Yarellam kalviye pathi pesurage

    ReplyDelete
  5. Ya Allah Leader M.H.M.Ashraff forget all ,,,,,,,,,,,,,,,,,,, this is Muslims life friends

    ReplyDelete

Powered by Blogger.