Header Ads



சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு



(பி. முஹாஜிரீன்)

சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் 2013 ம் கல்வியாண்டிற்கான முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா நிகழ்வுகள் இன்று (17) வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஐ.எம். பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ அன்சில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. சி. கஸ்ஸாலி, பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.எம். பாரீன்;, பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.எம். முஸ்தபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் எஸ்.எச். தம்ஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முனாபீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றன.

அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். பாஸித் விசேட சொற்பொழிவாற்றியதுடன் துஆப் பிரார்த்தனையும் மேற்கொண்டார். புதிய மாணவர்கள் உத்தியோகபூர்வமாக அதிதிகளால் ஏடு துவக்கம் செய்து வைக்கும் வைபவமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவருத்திக்குழு உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எல். முனாபீர் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்தார்.






1 comment:

  1. இவ்வாறு மண்ணில் எழுதுவதும், பொன்னாடை போற்றுவதும் இந்துக்களின் வழக்கம், இதை ஏன் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்ற வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.