சிரியாவில் 'அல் நுஸ்ரா ஜிஹாத்' குழுவின் ஆதிக்கம் - அஞ்சுகிறது அமெரிக்கா..!
(Tn)
சிரியாவில் தொடரும் அரசுக்கு எதிரான மோதலில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபாத் அல் நுஸ்ரா கிளர்ச்சி குழு தீர்க்கமான பங்கு வகிப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் குயிலியம் ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடும் ஜிஹா அல் நுஸ்ரா த் குழுவில் சுமார் 5000 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
“சிரியாவின் சிவில் யுத்தம் அல் நுஸ்ராவுக்கு பரிசாக கிடைத்துள்ளது. அவர்கள் தமது முழு சக்தியையும் பயன்படுத்தி போராடி வருகின்றனர்” என்ற இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட குழுவைச் சேர்ந்த நோர்மன் பினொட்மன் சி.என்.என்.
செய்திச் சேவைக்கு தெரிவித்தார். சிரிய அரசுக்கு எதிரான பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துவரும் அல் நுஸ்ரா படை, பஷர் அல் அஸாத் வீழும் வரை போராடுவதாக அறிவித்துள்ளது. எனினும் உள்நாட்டில் இந்த அமைப்புக்கு அதிக ஆதரவு இல்லை என கூறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள 13 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் அல் நுஸ்ராவை சிரியாவில் அதிக தாக்கத்தை செலுத்தக் கூடிய குழு என்றும் அது சிரியாவில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிரிய மோதலில் திருப்பு முனையாக இருக்கும் அல் நுஸ்ரா ஜிஹாத் குழு அசாத்திற்கு பின்னரான சிரியாவின் எதிர்காலம் குறித்து முன் கூட்டிய தயார் நிலையை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அல் நுஸ்ரா போராளிகள் தந்திரோபாயமாக சிரியாவின் பிரதான நகரங்களுக்கு அருகாமையில் இருக்கும் கிராமப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்தக் குழு அரசு இலக்குகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான ரகசியமான கட்டமைப்புகளை நாடு பூராகவும் உருவாக்கியுள்ளது என மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அல் நுஸ்ரா யுத்த ஒழுங்குகளுக்கு அமைய சிறப்பாக செயற்பட்டு வருவதோடு அரசுக்குள்ளும் உளவாளிகளை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அல் நுஸ்ரா படையை அமெரிக்கா தனது தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment