ரவூப் ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு செல்வதில்லையா..?
(எம்.பைசல் இஸ்மாயில்)
அம்பாரை மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரதேசத்திற்கு வருகை தராதது கட்சி ஆதரவாளர்களை வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பிற்பாடு அமைச்சர் ரவுப் ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு வருகை தரவில்லை. அமைச்சர் அதாஉல்லாவின் கோட்டையாக வர்ணிக்கப்படுகின்ற அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் யுத்த களத்தில் இருப்பது போன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அரசியல் செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களைவிட இம்முறை முஸ்லிம் காங்கிரஸிற்கு கூடுதலான வாக்குகள் அக்கரைப்பற்றில் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கூட தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான ஒரு நிலையில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வருகை தராமல் இழுத்தடிப்பது கேள்விக்குறிய விடயமாகும்.
அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் கூட அக்கரைப்பற்றில் திறந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இக்காரியாலயத்திற்குப் பொறுப்பான முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உப தலைவர் ஏ.எல்.மர்ஜூன் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மாற்றுக் கட்சிக்காரர்களால் மிகப் பலமான முறையில் தலையில் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸிற்கு செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் கட்சித் தலைமை இப்பிரதேச ஆதரவாளர்களை சிறந்த முறையில் அனுசரித்துச் செல்லவேண்டும். அதுமட்டுமல்ல மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எல்.தவத்திற்கு இதுவரை வரவேற்பு நிகழ்வு நடத்தப்படவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்ல மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கட்சியின் சிரேஸ்டத்துவ ஆதரவாளர்களை கண்டு கொள்ளாமல் தன் இஸ்டம் போல் செயற்படுவதாகவும் தவம் முன்னர் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக எப்படி இருந்தாரோ? அந்த நிலையில் தான் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மக்களுக்காகத்தான் கட்சியா?
ReplyDeleteஇல்லை
கட்சிக்காக மக்களா ?
நாங்க அப்பவே சொன்னம்!
தேர்தல் காற்றுக்கு மட்டும் ஒதுங்கும் சருகுகள் இவர்கள் என்று.
1. ஹகீம் ஏன் அக்கரைபத்துக்கு இப்போது வர வேண்டும்? நோன்பு நேரம் வந்து அடி புடி நடந்தா அதில் கொஞ்சம் அனுதாபம் கிடைக்கும் இந்த ஹகீமுக்கு. அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம். இதை இன்னும் இந்த மக்கள் புரியவில்லை என்பதுதான் இன்னும் கவலைக்குரிய விடயம்.
ReplyDelete2. அதாஉல்லாவுக்கு எதிராக எந்த ஒரு நாயாக இருந்தாலும் அவனை காங்கிரசில் உள்வாங்கி அவனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதுதான் இந்த காங்கிரஸ், மறும் ஹக்கீமின் நோக்கமாக இருந்தது. அதுதான் நடந்தும் முடிந்தது. அதில் இந்த தவம் உள்வாங்கப்பட்டார், வெற்றி பெற்றார் என்பதுதான் உண்மை. அதற்காக இந்த தவத்தை முன்னிலை படுத்தியோ, தவத்துக்கு வரவேற்பு கொடுக்க ஹகீம் AKP க்கு வரவேண்டும் என்றோ அவசியமில்லை. இதை மக்களாகிய நீங்கள் எதிர்பார்ப்பது முட்டள் தனம். இதுதான் ஹக்கீமின் நிலைப்பாடும் கூட. மக்கள்தான் ஏமாழிகள்.
3. ஹகீம் என்கின்ற தானைத் தலைவர், இந்த தவத்தை முன்னிலைப்படுத்தி, தவத்துக்கு வரவேற்பு கொடுத்து, அதாஉல்லா தவத்தால் ஏமாற்றப்பட்ட மாதிரி, ஹக்கீமும் தவத்டிடம் இருந்து அடிவாங்க எமாற்றுப்பட ஹகீம் விரும்ப மாட்டார் என்பதுதான் நிதர்சனம். தவம் என்ற தனி மனிதர் அதாஉல்லாவுடனான சொந்த விருப்பு வெறுப்புக்காக மாத்திரம்தான் அக்கட்சியை விட்டு காங்கிரசில் வந்தால்தால்தான் வரவேற்பு ரொம்ப ஜோராக இருக்கும் என்றதாலும் இந்த தவம் காங்கிரசோடு இணைந்தார் அல்லாமல் மக்களின் விடிவுக்ககவோ, அல்லது மக்களின் விடுதலை சிபீட்ச்சத்துக்கோ இந்த தவம் காங்கிரசோடு இனைய வில்லை. இதுகூட இந்த ஹக்கீமுக்கும் ஏன் இந்த மக்களுக்கும் கூட தெரியும்.
4. ஹகீம் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, தான் தான்தோண்றித்தனமகவேனும் AKP மக்களின் அபிமானியாகி அடுத்து வருகின்ற தேர்தலில் AKP வாக்கு வங்கியை நிரப்ப வேண்டும் என்பது இந்த தான்தோண்றி தவத்தின் நிலைப்பாடு.
ஆனால், பகுத்தறிவு இருந்தும், பகுத்தறிய பக்குவமில்லாத மூட மக்கள் நம்ம மக்கள்.
ஹக்கீமை விட்டு விடுங்கள் அவர் அக்கரைபற்றுக்கென்ன கிழக்கு மாகாணத்திற்கு எத்தனை தடவை வந்திருப்பார் என்பதை எண்ணிப்பாருங்கள்?
ReplyDeleteதலைவர்? அமைச்சர்? மாகாண சபை உறுப்பினர்? தவிசாளர்?
இவர்களின் நோக்கமே கல்லா கட்டுவதுதானே.
எந்தவொரு அரசியல் வாதிகளையும் இன்னொருவோரோடு ஒப்பிடுப்பார்க்க நம்மிடம் இதுவரை உரசல் கல்லும் இல்லை; சொக்கத் தங்கமும் இல்லை.
பொழுது போக்குக்கு வேட்டையாடித் திரிந்தவர்களும், மது அருந்துபவர்களும்தானே நமக்குத் தலைவர்கள்.
நமது தலைமைகளுக்கான குறைந்தபட்ச்ச தகுதி பள்ளி வளவிற்குள் நின்று புகைப்பதுதானே!
ஒரு பிரதேசத்திலோ அல்லது ஒரு ஊரிலோ ஒன்றுபட்டு இக்குப்பைகளை புறக்கணிக்க தெரியாத நாம்தான் உண்மையில் முட்டாள்கள்.
நமக்குத்தான் மாற்று சிந்தனையும் இல்லை, மாற்று வழியுமில்லை.