Header Ads



நாட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு



2012 ஆம் ஆண்டு 192 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஆண்டு அதி கூடிய எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி கடந்த ஆண்டு 192 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் பாலியல் நோய்ப் பிரிவுப் பொறுப்பாளர் டொக்டர் லிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

எனினும் கடந்த ஆண்டில் பதிவான எயிட்ஸ் நோயாளிகளில் அதிகளவானவர்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி 118 ஆண்ககளுக்கு எயிட்ஸ் நோய் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக டொக்டர் லிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.