ஷிராணிக்கு எதிரான குற்றவியல் பிரேணையை கைவிடு - வலியுறுத்துகிறது ஐ.நா.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் மீள ஆராயுமாறு ஐக்கிய நாடுகளின் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சபையின் சுயாதீன நீதிபதிகளின் சங்க மற்றும் சட்டத்தரணிகளின் விசேட பேச்சாளர் கெப்ரியல் நவுலினால் நேற்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றவியல் பிரேரணை தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தமது சங்கம் அவதானமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அது தொடர்பில் மீள் பரிசீலனையை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை அரசியலாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment