Header Ads



அமைச்சரவை மாற்றம் இன்று - இந்தியாவிலிருந்து ஹக்கீம் நாடு திரும்புகிறார்


அமைச்சரவையில் இன்று திங்கட்கிழமை கட்டாயமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி மாற்றப்படுமா என அவருக்கு நெருக்கமானவரிடம் கேட்டபோது, தற்போது ரவூப் ஹக்கீம் இந்தியாவில் தங்கி நிற்பதாகவும், இன்று திங்கட்கிழமை மாலையே அவர் நாடு திரும்புவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை புதிய அமைச்சரவை ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர்குறிப்பிட்டார். 

அண்மைக்காலத்தில் சர்ச்சைக்கு உட்பட்ட சில அமைச்சர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மின்சக்தி, கனியவளம், கல்வி, சுற்றாடல், விளையாட்டுத்துறை, பொது நிர்வாகம், தொழில்துறை, தொழினுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அமைச்சர் பதவிகள் இதற்போது மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரதியமைச்சர் பதவிகளில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அரசாங்க தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, நாளைய அமைச்சரவை மாற்றங்களின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பிரதியமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.