Header Ads



அல்மனார் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்வி கலாசார சமூக அபிவிருத்திக்கான அல்மானர் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கீழ் செயற்படும் காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஏதிர்வரும் 18-01-2013 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அல்மனார் அறிவியல் கல்லூரியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி தலைமையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் அல்மனார் அறிவியல் கல்லூரியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது கல்வி கலாசார சமூக அபிவிருத்திக்கான அல்மானர் நிறுவனத்தின் கீழ் செயற்படும் கல்வி அபிவிருத்திப் பிரிவு கலாசார அபிவிருத்திப்பிரிவு'சமூக அபிவிருத்திப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளினால் அல்மனார் இஸ்லாமிய கலாசாலை 'தெரிவு கற்கை நிலையம் 'கல்வி சகாய நிதியம் 'உயர் கல்வி வழிகாட்டல் நிலையம் 'இஸ்லாமிய நூலகம்'தகவல் தொழிநுட்ப நிலையம்'தொழில்நுட்பக் கல்வி நிலையம்'பள்ளிவாயல்'தஃவா நிலையம் 'மத நல்லிணக்க நிலையம்'விளையாட்டுக் கழகம்'கலாசார நிகழ்ச்சி மையம்'இளைஞர் அமைப்பு'மகளிர் அமைப்பு'குடி நீர் திட்டம்'தேக ஆரோக்கிய திட்டம்'அவசர உணவுத்திட்டம் 'மத்தியஸ்த சபை'உழ்ஹிய்யா'இப்தார்'உலர் உணவு'பெருநாள் உடை'பணம் வழங்கல் திட்டம்'வாழ்வாதார திட்டம்'சுகாதார சேவை'பொதுப்பணி மன்றம்'அநாதைகள் விதவைகள் பராமரிப்பு திட்டம் கைதிகள் நல்வாழ்வு வழிகாட்டல் திட்டம்'நவ முஸ்லிம் பராமரிப்பு நிலையம்'அழைப்பாளர்கள்'ஆசிரியர்கள் நியமிக்கும் திட்டம் போன்ற தற்போதைய மற்றும் ஏதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டதோடு முதலாவது பட்டமளிப்பு விழா தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவது சம்பந்தமாக அல்மனார் அறிவியல் கல்லூரியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியினால் தெளிவுபடுத்தப்பட்டது.



No comments

Powered by Blogger.