அஷ்ரப் நகரில் மர்ம சத்தம் - மக்களிடையே அச்ச உணர்வு
(TL)
அம்பாறை, ஒலுவில் சீனம்பிட்டி வயலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சில மணிநேரம் கேட்ட ஒருவித சத்தத்தால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமேற்பட்டுள்ளது. ஒலுவில் அஷ்ரப் நகருக்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகிலுள்ள இந்த வயலில் நேற்று மாலை மழைவிட்ட பின்னர் சுமார் 4 மணியளவில் ஒரு வித இரைச்சல் சத்தம் கேட்டது.
தண்ணி பொயிலர் கொதிக்கும் போது ஏற்படம் சத்தம் போன்று இந்தச் சத்தம் வயலின் ஒரு இடத்தில் நிலத்தில் கேட்டது.
இது பற்றிய தகவல் பரவவே அவ்விடத்தில் பெருமளவு மக்கள் கூடி அந்தச் சத்தத்தை கேட்டுள்ளனர். மாலை 6 மணிக்குப் பின்னரும் இந்த இரைச்சல் சத்தத்தைக் கேட்கக் கூடியதாயிருந்தது.
அம்பாறையில் நேற்றுக் காலை சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையிலும் கடும் மழை பெய்த நிலையிலும் இவ்வாறான சத்தம் கேட்டதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
Post a Comment